தமிழகம் முழுவதும் ‘கள்’ இறக்கி சந்தைப்படுத்தும் போராட்டம்


தமிழகம் முழுவதும் ‘கள்’ இறக்கி சந்தைப்படுத்தும் போராட்டம்
x
தினத்தந்தி 8 Dec 2021 12:37 AM IST (Updated: 8 Dec 2021 12:37 AM IST)
t-max-icont-min-icon

தமிழகம் முழுவதும் அடுத்த மாதம் 21-ந் தேதி ‘கள்’ இறக்கி சந்தைப்படுத்தும் போராட்டம் நடத்தப்படும் என்று தமிழ்நாடு ‘கள்’ இயக்க கள ஒருங்கிணைப்பாளர் நல்லசாமி கூறினார்.

நாகர்கோவில்:
தமிழகம் முழுவதும் அடுத்த மாதம் 21-ந் தேதி ‘கள்’ இறக்கி சந்தைப்படுத்தும் போராட்டம் நடத்தப்படும் என்று தமிழ்நாடு ‘கள்’ இயக்க கள ஒருங்கிணைப்பாளர் நல்லசாமி கூறினார்.
தமிழ்நாடு ‘கள்’ இயக்க கள ஒருங்கிணைப்பாளர் நல்லசாமி நேற்று நாகர்கோவிலில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
கள்
‘கள்’ தடை செய்யப்பட வேண்டிய போதைப் பொருளோ, மதுவோ அல்ல. ‘கள்’ ஒரு உணவு. அதை இறக்குவதும், பருகுவதும் இந்திய அரசியலமைப்புச் சட்டம் மக்களுக்கு கொடுத்திருக்கும் உணவு தேடும் உரிமை. மேலும் இது உலகளாவிய நடைமுறையும் ஆகும். 6 ஆண்டுகளுக்கு முன்பு பீகாரில் பூரண மதுவிலக்கு கொண்டு வரப்பட்டது. அப்போது அங்கே சாராயத்திற்கு, இறக்குமதி செய்யப்படும் மதுக்களுக்கு, இந்திய தயாரிப்பு அயல்நாட்டு மதுக்களுக்கு (ஐ.எம்.எப்.எல்.) தடை விதிக்கப்பட்டது. அதே நேரத்தில் ‘கள்’ளுக்கு விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.
மதுவிலக்கு கொண்டு வந்த பிறகு குற்றங்களும், விபத்துக்களும் வெகுவாக குறைந்திருப்பதாக அம்மாநில முதல்-மந்திரி நிதிஷ்குமார் பெருமிதத்தோடு கூறி வருகிறார். பீகாரை பின்பற்றித் தமிழ்நாட்டிலும் மதுவிலக்கு மற்றும் மதுக் கொள்கையினை மாற்றியமைக்க வேண்டியது காலத்தின் கட்டாயம். தமிழ்நாட்டில் மட்டும் 33 ஆண்டுகளுக்கும் மேலாக ‘கள்’ தடை தொடர்ந்து இருந்து வருகின்றது. ‘கள்’ தடையை நீக்கக் கோரி கடந்த 17 ஆண்டுகளாக ‘கள்’ இயக்கம் பலதரப்பட்ட போராட்டங்களை நடத்தி வந்துள்ளது.
போராட்டம்
‘கள்’ ஒரு தடை செய்யப்பட வேண்டிய போதை பொருள் தான் என நிரூபிப்போருக்கு ரூ.10 கோடி பரிசு அறிவிக்கப்பட்டது. இந்திய அரசியலமைப்பு சட்டத்தை ஏற்று நடக்கும் விதமாக அடுத்த மாதம் 21-ந் தேதியிலிருந்து தமிழ்நாடு முழுவதும் ‘கள்’ இறக்கி உள்நாட்டிலும், உலகளவிலும் சந்தைப்படுத்துவதென ‘கள்’ இயக்கம் முடிவு செய்துள்ளது. இதில் இருக்கும் நியாயத்தை ஏற்றுக் கொள்வோரை ஒன்றிணைத்து இந்தப் போராட்டம் நடத்தப்படும்.
‘கள்’ இறக்கி சந்தைப்படுத்தும் இந்த போராட்டத்துக்கு தமிழக பா.ஜனதா தலைவர் அண்ணாமலை, நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் ஆகியோர் ஆதரவு தெரிவித்துள்ளனர். அண்ணாமலை நெல்லை மாவட்டத்தில் நடைபெறும் போராட்டத்தில் பங்கேற்க இருப்பதாக கூறியுள்ளார். இதேபோல் பிற அரசியல் கட்சிகளின் தலைவர்களையும் பங்கேற்க செய்ய பேசி வருகிறோம். பனை, தென்னை, ஈச்சமரங்கள் இருக்கும் இடத்தில் எல்லாம் அதாவது 2 ஆயிரம், 3 ஆயிரம் இடங்களில் எங்களது போராட்டம் நடைபெறும்.
இவ்வாறு அவர் கூறினார்.
பேட்டியின்போது வக்கீல் முத்துகருப்ப பிள்ளை, கீழ்பவானி விவசாயிகள் நலச்சங்க செயலாளர் ஜெகநாதன் ஆகியோர் உடன் இருந்தனர்.

Next Story