வங்கி ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்


வங்கி ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 8 Dec 2021 12:54 AM IST (Updated: 8 Dec 2021 12:54 AM IST)
t-max-icont-min-icon

நெல்லையில் வங்கி ஊழியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

நெல்லை:

நெல்லை ஸ்ரீ்புரம் ஸ்டேட் வங்கி முன்பு வங்கி ஊழியர்கள் நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். பொதுத்துறை வங்கிகளை தனியார் மயமாக்கும் மத்திய அரசின் தவறான கொள்கையை கண்டித்தும், நடைபெற்றுக்கொண்டிருக்கும் நாடாளுமன்ற குளிர்கால கூட்டத் தொடரில் இந்த மசோதாவை தாக்கல் செய்வதை திரும்பப் பெற வலியுறுத்தியும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

ஆர்ப்பாட்டத்துக்கு தேசிய வங்கி ஊழியர் கூட்டமைப்பு நிர்வாகி கணபதி ராமன் தலைமை தாங்கினார். அகில இந்திய வங்கி அதிகாரிகள் சங்கம் திலகர், இந்திய வங்கி ஊழியர் சம்மேளனம் சிவசங்கர், அகில இந்திய வங்கி அதிகாரிகள் கூட்டமைப்பு சார்லஸ், அகில இந்திய வங்கி ஊழியர் சங்கம் சண்முகசுந்தரம் ஆகியோர் கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினர். இதில் ஏராளமான வங்கி ஊழியர்கள் கலந்து கொண்டனர். மேலும் இந்த கோரிக்கையை வலியுறுத்தி வருகிற 16, 17-ந் தேதிகளில் அகில இந்திய அளவில் வங்கி அதிகாரிகள் ஊழியர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட உள்ளனர்.

Next Story