பெண்ணை தாக்கியதாக தம்பதி உள்பட 3 பேர் மீது வழக்கு


பெண்ணை தாக்கியதாக தம்பதி உள்பட 3 பேர் மீது வழக்கு
x
தினத்தந்தி 7 Dec 2021 7:32 PM GMT (Updated: 2021-12-08T01:02:01+05:30)

பெண்ணை தாக்கியதாக தம்பதி உள்பட 3 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

ஜெயங்கொண்டம்:
அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டத்தை அடுத்த கல்லாத்தூர் வடவீக்கம் கிராமம் வடக்குத்தெருவை சேர்ந்தவர் கார்த்திகேயன். இவரது மனைவி நர்மதா(வயது 30). இவருக்கும், அதே தெருவை சேர்ந்த கல்யாணசுந்தரம் என்பவருக்கும் இடப்பிரச்சினை காரணமாக முன்விரோதம் இருந்து வந்தது. இந்நிலையில் நர்மதாவின் இடத்தில் இருந்த வேலி சாய்ந்த நிலையில் இருந்துள்ளது. இதனால் வேலியை யார் சாய்த்தது? என்று நர்மதா  கேட்டுள்ளார். அப்போது அங்கு வந்த கல்யாணசுந்தரம், அவரது மனைவி நளினி, உறவினர் தீபா உள்ளிட்டோர் சேர்ந்து நர்மதாவை தகாத வார்த்தைகளால் திட்டி தாக்கி கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது. இதில் பலத்த காயமடைந்த நர்மதா ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்து அவர் ஜெயங்கொண்டம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் கல்யாணசுந்தரம், நளினி, தீபா ஆகியோர் மீது போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் புகழேந்தி வழக்குப்பதிந்து விசாரித்து வருகிறார்.

Next Story