விபத்தில் போலீஸ்காரர் பலி


விபத்தில் போலீஸ்காரர் பலி
x
தினத்தந்தி 8 Dec 2021 1:07 AM IST (Updated: 8 Dec 2021 1:07 AM IST)
t-max-icont-min-icon

ஆலங்குளம் அருகே விபத்தில் போலீஸ்காரர் பரிதாபமாக உயிரிழந்தார்.

ஆலங்குளம், 
விருதுநகர் மாவட்டம் ஆலங்குளம் போலீஸ் நிலையத்தில் தனிப்பிரிவு போலீஸ்காரராக பணிபுரிந்து வந்தவர் செல்வகுமார் (வயது 35).  இவர் வெம்பக்கோட்டை அணைக்கட்டு பகுதியில் பணி முடித்துவிட்டு ஆலங்குளம் போலீஸ் நிலையத்திற்கு இரு சக்கர வாகனத்தில் வந்து கொண்டு இருந்தார். குண்டாயிருப்பு கிராமத்தில் மெயின்ரோட்டில் நின்றுகொண்டு இருந்த லாரி மீது இவர் வந்து கொண்டிருந்த இரு சக்கர வாகனம் மோதியதாக கூறப்படுகிறது. இதில் அவர் படுகாயம் அடைந்தார். உடனே அவர் சிகிச்சைக்காக சிவகாசி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். பின்னர் மேல் சிகிச்சைக்காக விருதுநகர் அரசு  மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் பரிதாபமாக இறந்தார். இதையடுத்து அவரது உடல் விருதுநகர் அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனை செய்யப்பட்டது. பின்னர் அவரது  உடல், ஆலங்குளம் மயானத்தில் போலீஸ் மரியாதையுடன் தகனம் செய்யப்பட்டது. விபத்தில் மரணம் அடைந்த போலீஸ்காரர் செல்வகுமார் மனைவிக்கு விருதுநகர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மனோகர் ஆறுதல் கூறியதுடன், ரூ.1 லட்சம் நிதி உதவி வழங்கினார்.


Related Tags :
Next Story