மாவட்ட செய்திகள்

இரும்பு கடையில் ஆஸ்பெட்டாஸ் ஷீட்டுகளை திருடிய 2 பேர் கைது + "||" + Two arrested for stealing asbestos sheets at iron shop

இரும்பு கடையில் ஆஸ்பெட்டாஸ் ஷீட்டுகளை திருடிய 2 பேர் கைது

இரும்பு கடையில் ஆஸ்பெட்டாஸ் ஷீட்டுகளை திருடிய 2 பேர் கைது
இரும்பு கடையில் ஆஸ்பெட்டாஸ் ஷீட்டுகளை திருடிய 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
கீழப்பழுவூர்:

இரும்பு கடையில் திருட்டு
அரியலூர் மாவட்டம் திருமானூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட கீழப்பழுவூரில் ஒரு இரும்புக்கடை உள்ளது. இந்த கடையில் இருந்து கடந்த 2 நாட்களுக்கு முன்பு சுமார் ரூ.50 ஆயிரம் மதிப்பிலான ‘ஆஸ்பெட்டாஸ் ஷீட்’டுகளை மர்ம நபர்கள் திருடி சரக்கு ஆட்டோவில் கொண்டு சென்றனர்.
இதுகுறித்து கடையின் உரிமையாளர் கீழப்பழுவூர் போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணையில் ஈடுபட்டனர்.
2 பேர் கைது
இந்நிலையில் நேற்று அரியலூரில் இருந்து திருச்சி செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் காணிக்கைபுரம் ெரயில்வே கேட்டில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக வந்த சரக்கு ஆட்டோவை மறித்து சோதனையிட்டனர்.
அப்போது அதில் ஆஸ்பெட்டாஸ் ஷீட்டுகள் இருந்தன. இது குறித்து நடத்திய விசாரணையில், இரும்பு கடையில் திருடிய ‘ஆஸ்பெட்டாஸ் ஷீட்’டுகளை சரக்கு ஆட்டோவில் வேறொரு இடத்திற்கு கொண்டு சென்றது தெரியவந்தது. இதையடுத்து ஆஸ்பெட்டாஸ் ஷீட்டுகளை சரக்கு ஆட்டோவுடன் பறிமுதல் செய்த போலீசார், அவற்றை திருடி சரக்கு ஆட்டோவில் கடத்தியதாக திருச்சி மாவட்டம் செம்பரை கிராமத்தை சேர்ந்த பழனியாண்டி மகன் விஜயகுமார் (வயது 33), ஆங்கரை கிராமத்தை சேர்ந்த வடிவேல் (49) ஆகியோரை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

தொடர்புடைய செய்திகள்

1. ஈரோட்டில் துணிகரம்: ரெயில்வே அதிகாரி போல் நடித்து ஆட்டோவை திருடிச்சென்ற வாலிபர்
ஈரோட்டில் ரெயில்வே அதிகாரி போல் நடித்து ஆட்டோவை துணிகரமாக திருடிச் சென்ற வாலிபரை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.
2. ஊஞ்சலூர் அருகே வீட்டின் பூட்டை உடைத்து நகை- பணம் திருட்டு
ஊஞ்சலூர் அருகே வீட்டின் பூட்டை உடைத்து நகை மற்றும் பணத்தை திருடிச்சென்ற மர்மநபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.
3. மோட்டார் சைக்கிள் திருட்டு
வள்ளியூரில் மோட்டார் சைக்கிளை மர்மநபர் திருடிச் சென்றார்.
4. 4 ஆடுகள் திருட்டு
ராமநாதபுரம் அருகே 4 ஆடுகள் திருட்டு குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
5. வீட்டில் பீரோவை உடைத்து நகை- பணம் திருட்டு
வீட்டில் பீரோவை உடைத்து நகை- பணத்தை மர்ம நபர்கள் திருடிச்சென்றனர்.