விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் திடீர் சாலை மறியல்


விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் திடீர் சாலை மறியல்
x
தினத்தந்தி 8 Dec 2021 1:08 AM IST (Updated: 8 Dec 2021 1:08 AM IST)
t-max-icont-min-icon

விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

செந்துறை:
அரியலூர் மாவட்டம் செந்துறையில் விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் திடீர் சாலை மறியலில் ஈடுப்பட்டனர். மயிலாடுதுறை மாவட்டம் பட்டவர்த்தி கிராமத்தில் அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவிக்க சென்றவர்களை தடுத்த சம்பவத்தை கண்டித்து இந்த சாலை மறியல் நடைபெற்றது. இதுகுறித்து தகவலறிந்த செந்துறை போலீசார் அங்கு வந்து பேச்சுவார்த்தை நடத்தியதை தொடர்ந்து அனைவரும் கலைந்து சென்றனர். இந்த திடீர் சாலை மறியலால் அரியலூர்-ஜெயங்கொண்டம் சாலையில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Next Story