விவசாயியை தாக்கிய மகன் உள்பட 6 பேர் மீது வழக்கு


விவசாயியை தாக்கிய மகன் உள்பட 6 பேர் மீது வழக்கு
x
தினத்தந்தி 8 Dec 2021 1:08 AM IST (Updated: 8 Dec 2021 1:08 AM IST)
t-max-icont-min-icon

விவசாயியை தாக்கிய மகன் உள்பட 6 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

விக்கிரமங்கலம்:
அரியலூர் மாவட்டம் விக்கிரமங்கலம் அருகே உள்ள நாகமங்கலம் அண்ணா நகரை சேர்ந்தவர் மாணிக்கம்(வயது 74). விவசாயி. இவரது மகன் சுப்பிரமணியன்(46). சம்பவத்தன்று மாணிக்கத்திடம், சுப்பிரமணியன் வீட்டு இடத்தின் பட்டாவை கேட்டதாகவும், அதனை கொடுக்க முடியாது என்று மாணிக்கம் கூறியதாகவும் தெரிகிறது. அப்போது மாணிக்கத்திற்கும், சுப்பிரமணியனுக்கும் இடையே வாய்த்தகராறு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து அங்கு வந்த சுப்பிரமணியனின் உறவினர்களான உமா, பரமசிவம், செல்வி, சுதா, சின்னப்பிள்ளை ஆகியோர் மாணிக்கத்தை திட்டி தாக்கினர். இதில் படுகாயமடைந்த மாணிக்கம் அரியலூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இது குறித்து விக்கிரமங்கலம் போலீசில் மாணிக்கம் கொடுத்த புகாரின்பேரில் சுப்பிரமணியன் உள்ளிட்ட 6 பேர் மீது சப்-இன்ஸ்பெக்டர் ரவிச்சந்திரன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

Next Story