மொபட்டுடன் கீழே விழுந்த விவசாயி சாவு


மொபட்டுடன் கீழே விழுந்த விவசாயி சாவு
x
தினத்தந்தி 8 Dec 2021 1:08 AM IST (Updated: 8 Dec 2021 1:08 AM IST)
t-max-icont-min-icon

சாலையின் குறுக்கே கன்றுக்குட்டி வந்ததால் மொபட்டுடன் கீழே விழுந்த விவசாயி இறந்தார்.

குன்னம்:
பெரம்பலூர் மாவட்டம் செங்குணம் மேற்குத்தெருவை சேர்ந்தவர் துரைசாமி(வயது 58). விவசாயி. இவர் நேற்று முன்தினம் செங்குணம் பிரிவு சாலையில் இருந்து செங்குணம் நோக்கி தனது மொபட்டில் சென்றார். அப்போது அங்கு மேய்ந்து கொண்டிருந்த கன்றுக்குட்டி சாலையின் குறுக்கே வந்ததால், அதன்மீது மோதாமல் இருக்க மொபட்டை நிறுத்த முயன்றபோது நிலை தடுமாறி கீழே விழுந்தார். இதில் தலையின் பின்பகுதியில் அடிபட்டு பெரம்பலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அவர், நேற்று சிகிச்சை பலனின்றி இறந்தார். இது குறித்து மருவத்தூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் கதிரேசன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

Next Story