மாவட்ட செய்திகள்

தரைப்பாலத்தை மூழ்கடித்து செல்லும் தண்ணீர் + "||" + To flood

தரைப்பாலத்தை மூழ்கடித்து செல்லும் தண்ணீர்

தரைப்பாலத்தை மூழ்கடித்து செல்லும் தண்ணீர்
ஆற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கினால் தரைப்பாலத்தை மூழ்கடித்து தண்ணீர் செல்கிறது.
ஆலங்குளம், 
ஆற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கினால் தரைப்பாலத்தை மூழ்கடித்து தண்ணீர் செல்கிறது. 
பொதுமக்கள் மகிழ்ச்சி 
வெம்பக்கோட்டை தாலுகா வடகரை வழியாக வெம்பக்கோட்டை அணை கட்டுக்கு செல்லும் தேவி யாற்றில் வெள்ளம் பெருக்கெடுத்து 3 நாட்களாக ஓடுகிறது. வடகரை கண் பாலத்தில் மேலே வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுவதால் கிராமங்கள் துண்டித்து தீவுபோல் காட்சியளிக்கிறது.
 வடகரை வழியாக செல்லும் தேவியாற்றில் 20 ஆண்டுகளுக்கு முன்னர் வெள்ளம் வந்தது. பின்னர் இப்போதுதான் வெள்ளம் செல்கிறது என பொதுமக்கள் மகிழ்ச்சியுடன் கூறினர். தரை மட்ட பாலத்தின் வழியாக தண்ணீர் பெருக்கெடுத்து செல்கிறது. 
கோரிக்கை
ஆற்றுக்கு தெற்கே உள்ள தென்கரை, நைனாபுரம், கோட்டைபட்டி, செல்லம்பட்டி, கொருக்காம்பட்டி ஆகிய கிராமத்து மக்கள் ராஜபாளையம், ஆலங்குளம், வெம்பக்கோட்டை ஸ்ரீவில்லிபுத்துர், சிவகாசி ஆகிய பகுதிகளுக்கு செல்ல முடியாமல் சிரமப்படுகின்றனர். 
அதேபோல திருவேங்கிடம், கலிங்க பட்டி, சங்கரன்கோவிலுக்கு செல்ல முடியாத நிலையும் உள்ளது. இதனால் மாணவர்கள் பள்ளி, கல்லூரிக்கு செல்ல முடியாமல் அவதியுறுகின்றனர். 
எனவே வடகரை பாலத்தை தரம் உயர்த்தி மேம்பாலமாக கட்டி தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

1. பாலாற்றில் வெள்ளப் பெருக்கு
16 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் பாலாற்றில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டு உள்ளது.
2. அய்யனார் கோவில் ஆற்றில் வெள்ளப்பெருக்கு
ராஜபாளையம் அய்யனார் கோவில் ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.
3. கவுசிகா ஆற்றில் வெள்ளப்பெருக்கு
விருதுநகர் கவுசிகா ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. குடியிருப்பு பகுதிகளை மழைநீர் சூழ்ந்தது.
4. தென்காசியில் பரவலாக மழை; குற்றாலம் அருவிகளில் வெள்ளப்பெருக்கு
தென்காசியில் பரவலாக மழை பெய்தது. குற்றாலம் அருவிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.
5. ஆறுகளில் வெள்ளப்பெருக்கு
சிவகங்கை மாவட்டத்தில் தொடர்ந்து மழை பெய்து வருவதால் இங்குள்ள பாலாறு, பாம்பாறு, மணிமுத்தாறு, சருகணியாறு, வைகையாறு உள்ளிட்ட ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு உள்ளது.