கஞ்சா கடத்திய 2 பேர் கைது
கஞ்சா விற்றதாக 2 பேரை கைது செய்தனர்.
குழித்துறை,
மார்த்தாண்டம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் மகேஸ்வரராஜ் மற்றும் போலீசார் சிராயன்குழி பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது, ஒரு மோட்டார் சைக்கிளில் 2 வாலிபர்கள் வேகமாக சென்று கொண்டிருந்தனர்.
அவர்கள் மீது சந்தேகம் அடைந்த போலீசார் 2 பேரையும் மடக்கிப் பிடித்து சோதனையிட்டனர். அப்போது அவர்களிடம் 2 கிலோ கஞ்சா இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. விசாரணையில், அவர்கள் காட்டாத்துறை கவியல்லூரை சேர்ந்த ஆல்வின் (வயது32), இரவிபுதூர்கடை குட்டிமாவிளையை சேர்ந்த அஜித் (26) என்பதும், கஞ்சா கடத்தி சென்று விற்பனை செய்து வந்ததும் தெரியவந்தது. இதையடுத்து 2 பேரையும் போலீசார் கைது செய்து அவர்களிடம் இருந்த 2 கிேலா கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.
Related Tags :
Next Story