தொழிலாளியை தாக்கி நகை, பணம் பறிப்பு
தொழிலாளியை தாக்கி நகை,பணம் பறிக்கப்பட்டது.
களியக்காவிளை,
களியக்காவிளை அருகே உள்ள பளுகல் போலீஸ் நிலையத்திற்கு உட்பட்ட துருத்தியார விளையை சேர்ந்தவர் ஜார்ஜ் (வயது53), தொழிலாளி. இவரது தம்பி சசி அந்த பகுதியில் கோழி பண்ணை வைத்துள்ளார். இவர்களுக்கும் அந்த பகுதியை சேர்ந்த கிளிட்டஸ் என்பவருக்கும் இடையே தொழில்ரீதியாக போட்டி இருந்ததாக தெரிகிறது.
இந்தநிலையில், நேற்று முன்தினம் ஜார்ஜ் பரக்குன்று சந்தை அருகே சென்று கொண்டிருந்தார். அப்போது கிளிட்டஸ் மற்றும் 2 பேர் சேர்ந்து ஜார்ஜை தடுத்து நிறுத்தி தாக்கி, அவரிடம் இருந்த ரூ.50 ஆயிரம் மற்றும் கழுத்தில் கிடந்த 5 பவுன் தங்க சங்கிலியை பறித்து சென்ற தாக கூறப்படுகிறது. படுகாயம் அடைந்த ஜார்ஜை அக்கம் பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். இதுகுறித்த புகாரின் பேரில் கிளிட்டஸ் மற்றும் கண்டால் தெரியும் 2 பேர் மீது பளுகல் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story