ஆர்ப்பாட்டம்
தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்கத்தின் சார்பில் விருதுநகரில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
விருதுநகர்,
விருதுநகர் கலெக்டர் அலுவலகம் முன்பு தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்கத்தின் விருதுநகர் மாவட்ட கிளையின் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மாவட்ட தலைவர் செல்வராஜ் தலைமையில் நடந்த இந்த ஆர்ப்பாட்டத்தில் சத்துணவு மையங்களில் உள்ள காலிப்பணியிடங்களை பதவி உயர்வுக்கு முன்பாக விருப்பமாறுதல் வழங்க கோரியும், காலிப்பணியிடங்களை எந்தவித நிபந்தனையுமின்றி நிரப்ப வேண்டும் என்பன உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மாவட்ட செயலாளர் சுதந்திர கிளாரா கோரிக்கைகளை விளக்கி பேசினார். அரசு ஊழியர் சங்க மாவட்ட செயலாளர் வைரவன், வேளாண்மைத் துறை அமைச்சு பணியாளர் சங்க மாவட்டச் செயலர் முனியாண்டி மற்றும் பலர் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டனர். அரசு ஊழியர் சங்க மாவட்ட துணை தலைவர் கண்ணன் நிறைவுரையாற்றினார். முடிவில் மாவட்ட சங்க துணைத்தலைவர் எஸ்தர் நன்றி கூறினார்.
பதவி உயர்வு, காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும் என்பன உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
Related Tags :
Next Story