சம்பளம் வழங்காததை கண்டித்து பதிவாளர் அலுவலகம் முற்றுகை


சம்பளம் வழங்காததை கண்டித்து பதிவாளர் அலுவலகம் முற்றுகை
x
தினத்தந்தி 8 Dec 2021 1:57 AM IST (Updated: 8 Dec 2021 1:57 AM IST)
t-max-icont-min-icon

மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் சம்பளம் வழங்காததை கண்டித்து பதிவாளர் அலுவலகம் முற்றுகையிடப்பட்டது. நிதி நெருக்கடி

மதுரை, 
மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் சம்பளம் வழங்காததை கண்டித்து பதிவாளர் அலுவலகம் முற்றுகையிடப்பட்டது.
நிதி நெருக்கடி
மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் நிர்வாக சீர்கேடு காரணமாக கடும் நிதி நெருக்கடி ஏற்பட்டுள்ளது. இதனால், பல்கலைக்கழகத்தில் பணியாற்றும் ஆசிரியர் மற்றும் ஆசிரியர் அல்லாத பணியாளர்களுக்கும், ஓய்வூதியர்கள், குடும்ப ஓய்வூதியர்களுக்கும் கடந்த நவம்பர் மாத சம்பளம் தற்போது வரை வழங்கப்படவில்லை. 
இதனை கண்டித்து, ஆசிரியர் அல்லாத பணியாளர்கள் நலச்சங்கத்தின் சார்பில், வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபடுடப்போவதாக அறிவித்திருந்தனர். இந்த நிலையில், பல்கலைக்கழக பணியாளர்கள், ஓய்வூதியர்கள் மற்றும் குடும்ப ஓய்வூதியர்களுக்கு உடனடியாக நவம்பர் மாதம் சம்பளத்தை வழங்க வலியுறுத்தி பதிவாளர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். 
மனு
இதனால், பல்கலைக்கழக வளாகம் கடந்த 2 நாட்களாக பரபரப்பாக காணப்படுகிறது. சம்பள பிரச்சினை குறித்து, பதிவாளரிடம் கோரிக்கை மனுவும் கொடுக்கப்பட்டு உள்ளது. 
அந்த மனுவில், பல்கலைக்கழகம் 4-வது முறையாக தேசிய தர மதிப்பீட்டு குழுவால், ஆற்றல்சார் பல்கலைக்கழகமாக சான்றிதழ் பெறுவதற்கு பல்கலைக்கழகத்தில் பணியாற்றி ஓய்வு பெற்ற ஓய்வூதியர்கள், தற்போதைய பணியாளர்கள் ஆகியோர் மட்டுமே காரணம். எனவே, பல்கலைக்கழகத்தின் வளர்ச் சிக்காக பாடுபடும் பணியாளர்களுக்கும், ஓய்வூதியர் களுக்கும் உடனடியாக சம்பளம் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.

Next Story