தண்ணீரில் மூழ்கிய நெற்பயிர்கள்


தண்ணீரில் மூழ்கிய நெற்பயிர்கள்
x
தினத்தந்தி 8 Dec 2021 2:13 AM IST (Updated: 8 Dec 2021 2:13 AM IST)
t-max-icont-min-icon

செல்லம்பட்டி பகுதியில் நெற்பயிர்கள் தண்ணீரில் மூழ்கி சேதம் அடைந்ததால் விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர்.

உசிலம்பட்டி, 
செல்லம்பட்டி பகுதியில் நெற்பயிர்கள் தண்ணீரில் மூழ்கி சேதம் அடைந்ததால் விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர்.
கால்வாய் பாசனம்
உசிலம்பட்டி தாலுகா செல்லம்பட்டி பகுதியில் உள்ள செல்லம்பட்டி, வின்னகுடி, கொடிக்குளம், வடுகபட்டி, நாட்டாபட்டி, சொக்கத் தேவன்பட்டி, வாலாந்தூர், நாட்டாமங்கலம், அய்யம்பட்டி உள்பட பல்வேறு கிராமங் களில் திருமங்கலம் பிரதான கால்வாய் பாசனத்தை வைத்து சுமார் 20 ஆயிரம் ஏக்கருக்கு மேல் நெற்பயிர்களை விவசாயிகள் சாகுபடி செய்துள்ளனர். 
தற்போது இந்த நெற்பயிர்கள் பறிந்து பால் பிடிக்கும் நிலையில் உள்ளது. இந்த நிலையில் இந்த பகுதியில் பெய்த கன மழையினால் வயல்வெளிகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. 
இதனால் பயிர்கள் அனைத்தும் சாய்ந்து தண்ணீரில் மூழ்கி கிடக்கின்றன. பால் பிடிக்கும் தருவாயில் தண்ணீரில் மூழ்கிக் கிடக்கும் நெல் மணிகள் வெகுவாக பாதிக்கப்பட்டு மகசூலும் அதிகளவில் பாதிக்கப்படும் என்று விவசாயிகள் வேதனை தெரிவித்துள்ளனர். இதுகுறித்து விவசாயிகள் தவசி, ராமலிங்கம் கூறுகையில், மழைவெள்ளத்தில் நெற்பயிர்கள் பறிந்து பால் பிடிக்கும் தருவாயில் உள்ள நிலையில் அனைத்து நெற்பயிர்களும் சாய்ந்து தண்ணீரில் மூழ்கியது  வேதனை அளிக்கிறது. 
பாதிப்பு
இப்படி தண்ணீரில் நெற்பயிர்கள் மூழ்கியதால் நெற்பயிர்கள் அழுகி மகசூல் முற்றிலுமாக பாதிக்கப்படும். எனவே இந்த பயிர்களுக்கு உரிய நிவாரணம் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவித்தனர். இதனைத் தொடர்ந்து செல்லம்பட்டி வேளாண் அதிகாரிகள்  பயிர்களை ஆய்வு செய்து வருகின்றனர் என்று செல்லம்பட்டி வேளாண்மை உதவி இயக்குனர் சுமதி தெரிவித்தார்.

Next Story