ஒமைக்ரான் வைரஸ் தாக்கிய டாக்டர் கொரோனா பாதிப்பில் இருந்து மீளவில்லை - சுகாதார துறை அதிகாரி தகவல்
ஒமைக்ரான் வைரஸ் தாக்கிய டாக்டர் கொரோனா பாதிப்பில் இருந்து இன்னும் மீளவில்லை என்று சுகாதார துறை அதிகாரி தெரிவித்துள்ளார்.
பெங்களூரு:
இன்னும் மீளவில்லை
நாட்டிலேயே முதல் முறையாக கர்நாடகத்தில் 2 பேருக்கு அபாயகரமான ஒமைக்ரான் வைரஸ் பாதிப்பு ஏற்பட்டது கண்டறியப்பட்டது. அதில் ஒருவர் தென்ஆப்பிரிக்காவில் இருந்து வந்தவர். மற்றொருவர் பெங்களூருவை சேர்ந்த 46 வயது அரசு டாக்டர். அவர் பெங்களூரு சிவாஜிநகரில் உள்ள பவுரிங் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார். அவர் கொரோனா பாதிப்பில் இருந்து விடுபட்டார்.
இதையடுத்து அவரை வீட்டுக்கு அனுப்ப டாக்டர்கள் முடிவு செய்தனர். அதற்கு முன்பு அவருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. அதில் அவருக்கு கொரானா பாதிப்பு இருப்பது மீண்டும் உறுதியாகியுள்ளது. இதன் மூலம் அவர் இன்னும் கொரோனா பாதிப்பில் இருந்து மீளவில்லை என்று தெரியவந்தது. இதையடுத்து அவர் அதே ஆஸ்பத்திரியில் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகிறார்.
கொரோனா பாதிப்பு
இதுகுறித்து பெங்களூரு மாநகராட்சி சுகாதார துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், ‘‘ஒமைக்ரான் வைரசால் பாதிக்கப்பட்ட டாக்டருக்கு மீண்டும் பரிசோதனை செய்யப்பட்டது. ஆனால் அவருக்கு கொரோனா பாதிப்பு இருப்பதாக முடிவு வந்துள்ளது. அவர் தொடர்ந்து தனிமையில் உள்ளார். தற்போது அவருக்கு எந்த அறிகுறியும் இல்லை’’ என்றார்.
Related Tags :
Next Story