மு.க.ஸ்டாலின் 11-ந் தேதி சேலம் வருகை: விழா மேடை அமைக்கும் பணி தீவிரம்-அமைச்சர் கே.என்.நேரு நேரில் பார்வையிட்டார்
மு.க.ஸ்டாலின் வருகிற 11-ந் தேதி சேலத்தில் நடைபெறும் அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் கலந்து கொள்கிறார். இதைமுன்னிட்டு விழா மேடை அமைக்கும் பணி தீவிரமாக நடந்து வருகிறது. இந்த பணியை அமைச்சர் கே.என்.நேரு பார்வையிட்டார்.
சேலம்:
மு.க.ஸ்டாலின் வருகிற 11-ந் தேதி சேலத்தில் நடைபெறும் அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் கலந்து கொள்கிறார். இதைமுன்னிட்டு விழா மேடை அமைக்கும் பணி தீவிரமாக நடந்து வருகிறது. இந்த பணியை அமைச்சர் கே.என்.நேரு பார்வையிட்டார்.
முதல்-அமைச்சர் சேலம் வருகை
சேலத்தில் அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா வருகிற 11-ந்தேதி நடக்கிறது. விழாவில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு பொதுமக்களுக்கு ஏராளமான நலத்திட்ட உதவிகள் வழங்குகிறார். தொடர்ந்து கட்சி விழாவில் கலந்து கொண்டு பேசுகிறார். இதில் கலந்து கொள்வதற்காக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் 11-ந் தேதி காலையில் சேலம் வருகிறார்.
அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா சேலம் சீலநாயக்கன்பட்டி பகுதியில் நடக்கிறது. இதற்காக அந்த பகுதியில் சுமார் 1 லட்சம் சதுர அடி பரப்பளவில் மிக பிரமாண்டமான அளவில் விழா பந்தல் மற்றும் மேடை அமைக்கப்படுகிறது.
பார்வையிட்டார்
நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் கே.என்.நேரு நேற்று காலை பந்தல் அமைக்கும் பணியை நேரில் பார்வையிட்டார். அப்போது பணியை விரைந்து முடிக்க வேண்டும் என்று அதிகாரிகளிடம் கேட்டுக்கொண்டார்.
பின்னர் கலெக்டர் கார்மேகம், மாநகராட்சி ஆணையாளர் கிறிஸ்துராஜ் ஆகியோரிடம் விழா ஏற்பாடுகள் குறித்து கேட்டு அறிந்தார். தொடர்ந்து அரசு விழாவிற்கான முன்னேற்பாடு பணிகளை விரைந்து செயல்படுத்த வேண்டும் என்று அவர்களிடம் கூறினார்.
இதில் சேலம் மத்திய மாவட்ட தி.மு.க. செயலாளர் வக்கீல் ராஜேந்திரன் எம்.எல்.ஏ., மேற்கு மாவட்ட பொறுப்பாளர் டி.எம்.செல்வகணபதி, கிழக்கு மாவட்ட பொறுப்பாளர் எஸ்.ஆர். சிவலிங்கம் மற்றும் கட்சி நிர்வாகிகள், அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story