திருவள்ளூர் அருகே அம்பேத்கர் படத்துக்கு மாலை அணிவித்ததில் கோஷ்டி மோதல்; 7 பேர் கைது
திருவள்ளூர் அருகே அம்பேத்கர் படத்துக்கு மாலை அணிவித்ததில் கோஷ்டி மோதல் ஏற்பட்டது. இது தொடர்பாக 7 பேர் கைது செய்யப்பட்டனர்.
திருவள்ளூர்,
திருவள்ளூரை அடுத்த திருவாலங்காடு ஒன்றியம் முத்துக்கொண்டாபுரம் சீதாபுரம் கிராமத்தை சேர்ந்தவர் தட்சிணாமூர்த்தி. இவரது மகன் ரமேஷ் (வயது 36). நேற்று முன்தினம் ரமேஷ் கனகம்மாசத்திரம் பழைய போலீஸ் நிலையம் அருகே டாக்டர் அம்பேத்கரின் நினைவு நாளையொட்டி அவரது உருவப்படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செய்வதற்காக நின்று கொண்டிருந்தார்.
அப்போது அங்கு வந்த திருவள்ளூரை அடுத்த நெடுமரம் பகுதியை சேர்ந்த அருண் என்கிற அருண்குமார் (35), அபி என்கிற பிருத்திவி (22), சிவாடா காலனி மாதா கோவில் தெருவை சேர்ந்த ஸ்டாலின் (35), விஜயகுமார் (22) ஆகியோர் இங்கே படம் வைக்க கூடாது என்று கூறி தகராறில் ஈடுபட்டு, அவரை இரும்பு கம்பியாலும் தாக்கினார்கள். பதிலுக்கு ரமேஷ் தனது உறவினர்களான காளிதாஸ் (34) குமார் (23) ஆகியோருடன் சேர்ந்து அருண்குமார் தரப்பினரை தாக்கியுள்ளார்.
இதுகுறித்து இரு தரப்பினரும் தனித்தனியாக கனகம்மாசத்திரம் போலீசில் புகார் செய்தார். போலீசார் இது சம்பந்தமாக வழக்குப்பதிவு செய்து அருண், அபி, ஸ்டாலின், விஜயகுமார், ரமேஷ், காளிதாஸ், குமார் ஆகியோரை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.
Related Tags :
Next Story