கும்மிடிப்பூண்டி அருகே கால்வாயில் அடித்து செல்லப்பட்ட விவசாயி பிணமாக மீட்பு


கும்மிடிப்பூண்டி அருகே கால்வாயில் அடித்து செல்லப்பட்ட விவசாயி பிணமாக மீட்பு
x
தினத்தந்தி 8 Dec 2021 5:22 PM IST (Updated: 8 Dec 2021 5:22 PM IST)
t-max-icont-min-icon

கும்மிடிப்பூண்டி அருகே கால்வாய் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்ட விவசாயி பிணமாக மீட்கப்பட்டார்.

கும்மிடிப்பூண்டி,

திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி அடுத்த ஈகுவார்பாளையம் ஊராட்சிக்கு உட்பட்ட குமரநாயக்கன் பேட்டை கிராமத்தில் வசித்து வந்தவர் அழகேசன் (வயது53). விவசாயி. இவர், நேற்று முன்தினம் அதே பகுதியையொட்டி உள்ள கால்வாயை கடக்க முயற்சித்து உள்ளார். அப்போது எதிர்பாராத விதமாக கால்வாய் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டார்.

கால்வாயில் அடித்து செல்லப்பட்ட விவசாயி அழகேசனை கும்மிடிப்பூண்டி தீயணைப்புத்துறையினர் தேடி வந்தனர்.இந்த நிலையில் கோங்கல் அருகே ஒதுங்கிய அவரது உடலை கிராம மக்கள் மீட்டனர். தகவல் அறிந்து விரைந்து வந்த போலீசார் அவரது உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக பொன்னேரி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Next Story