சூறாவளி காற்றில் மேரக்காய் பந்தல்கள் சரிந்தன


சூறாவளி காற்றில் மேரக்காய் பந்தல்கள் சரிந்தன
x
தினத்தந்தி 8 Dec 2021 6:53 PM IST (Updated: 8 Dec 2021 6:53 PM IST)
t-max-icont-min-icon

கோத்தகிரி பகுதியில் சூறாவளி காற்றில் மேரக்காய் பந்தல்கள் சரிந்தன. இதனால் விவசாயிகள் கவலை அடைந்தனர்.

கோத்தகிரி

கோத்தகிரி பகுதியில் சூறாவளி காற்றில் மேரக்காய் பந்தல்கள் சரிந்தன. இதனால் விவசாயிகள் கவலை அடைந்தனர்.

மேரக்காய் சாகுபடி

கோத்தகிரி மற்றும் அதன் சுற்று வட்டாரப் பகுதிகளில் தேயிலை விவசாயம் பிரதான தொழிலாக உள்ளது. இது தவிர ஏராளமான விவசாயிகள் மேரக்காய் உள்ளிட்ட மலைக்காய்கறிகளை பயிரிட்டு வருகின்றனர். குறிப்பாக மிளிதேன், எரிசிபெட்டா, நெடுகுளா, இந்திரா நகர், வ.உ.சி. நகர், ஓடேன் துறை உள்ளிட்ட பகுதிகளில் நூற்றுக்கணக்கான ஏக்கர் பரப்பளவில் மேரக்காய் பயிரிடப்பட்டு உள்ளது.

இந்தநிலையில் கடந்த வாரம் கோத்தகிரி பகுதியில் பலத்த மழை பெய்தது. இதன் காரணமாக மேரக்காய் விளைச்சல் அதிகரித்தது. ஆனாலும் உரிய கொள்முதல் விலை கிடைக்கவில்லை. இதனால் விவசாயிகள் பாதிக்கப்பட்டு வந்தனர். 

பந்தல்கள் சரிந்தன

இதற்கிடையில் மழையால் நிலத்தில் ஏற்பட்ட ஈரப்பதம் மற்றும் சூறாவளி காற்று காரணமாக மேரக்காய் பயிரிட அமைக்கப்பட்டு இருந்த பந்தல்கள் சரிந்து விழுந்தன. இதனால் மேரக்காய் சாகுபடி குறையும் நிலை ஏற்பட்டு உள்ளது. இதன் காரணமாக விவசாயிகள் கவலை அடைந்து உள்ளனர். இதுகுறித்து விவசாயிகள் கூறியதாவது:-

கோத்தகிரி பகுதியில் தொடர்ந்து மழை பெய்து வந்தது. மேலும் காற்றும் பலமாக வீசி வந்தது. இதனால் மேரக்காய் பயிரிட அமைக்கப்பட்டு இருந்த பந்தல்கள் சரிந்துவிட்டன. இதனால் சாகுபடி குறையும் அபாயம் ஏற்பட:டு உள்ளது. இதன் காரணமாக மேரக்காய் பயிரிட்டுள்ள விவசாயிகளுக்கு பல லட்சம் ரூபாய் நஷ்டம் ஏற்பட்டு உள்ளது. எனவே தமிழக அரசு பாதிக்கபட்ட விவசாயிகளுக்கு தோட்டக்கலைத்துறை மூலம் நஷ்ட ஈடு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.


Next Story