தட்கல் டிக்கெட் வசதி மீண்டும் வழங்காததால் ரெயில் பயணிகள் அவதி


தட்கல் டிக்கெட் வசதி மீண்டும் வழங்காததால் ரெயில் பயணிகள் அவதி
x
தினத்தந்தி 8 Dec 2021 7:08 PM IST (Updated: 8 Dec 2021 7:08 PM IST)
t-max-icont-min-icon

தென்மாவட்ட ரெயில்களில் தட்கல் டிக்கெட் முன்பதிவு செய்யும் வசதியை மீண்டும் கொண்டுவர வேண்டும் என்று பயணிகள் தரப்பில் வலியுறுத்தப்பட்டு உள்ளது. இதனால், பயணிகள் கடும் அவதிக்கு உள்ளாகி உள்ளனர்.

மதுரை, 
தென்மாவட்ட ரெயில்களில் தட்கல் டிக்கெட் முன்பதிவு செய்யும் வசதியை மீண்டும் கொண்டுவர வேண்டும் என்று பயணிகள் தரப்பில் வலியுறுத்தப்பட்டு உள்ளது. இதனால், பயணிகள் கடும் அவதிக்கு உள்ளாகி உள்ளனர்.
தட்கல் முன்பதிவு
கொரோனா ஊரடங்கு தளர்வில் இயக்கப்பட்ட ரெயில்கள் அனைத்தும் கூடுதல் கட்டணத்துடன் சிறப்பு மற்றும் பண்டிகை கால சிறப்பு ரெயில்களாக இயக்கப்பட்டன. இதற்கிடையே, இந்த ரெயில்கள் தற்போது மீண்டும் வழக்க மான எக்ஸ்பிரஸ் ரெயில்களாக இயக்கப்பட்டு வருகிறது. ஆனால் ஒரு சில தென்மாவட்ட ரெயில்களில் அவசர பயணத்துக்கான தட்கல் டிக்கெட் முன்பதிவு செய்யும் வசதி இல்லை.
அதாவது, நாகர்கோவிலில் இருந்து மதுரை வழியாக பெங்களூரு செல்லும் எக்ஸ்பிரஸ் ரெயில் (வ.எண்.17236/17235) மற்றும் தூத்துக்குடியில் இருந்து மதுரை வழியாக மைசூரு செல்லும் எக்ஸ்பிரஸ் ரெயில் (வ.எண்.16236/16235) ஆகிய ரெயில்களில் இரு மார்க்கங்களிலும் தட்கல் டிக்கெட் முன்பதிவு செய்யும் வசதி இல்லை.
சிரமம்
இதனால், இந்த ரெயில்களில் அவசரமாக வெளியூர் பயணம் மேற்கொள்ளும் பயணிகள் தட்கல் டிக்கெட் எடுக்க முடி யாமல் சிரமத்திற்கு ஆளாகி உள்ளனர். இந்த 2 ரெயில்களும் தென்மேற்கு மண்டல ரெயில்வேயின் கட்டுப்பாட்டில் உள்ளது குறிப்பிடத்தக்கது. ஏற்கனவே, கொரோனாவை காரணமாக சொல்லி, பண்டிகை கால சிறப்பு ரெயிலாக கூடுதல் கட்டணம் வசூலிக்கப்பட்டு இயக்கப்பட்டது.
தற்போது, சாதாரண ரெயிலாகவும், வழக்கமான கட்டணத்துடன் இயக்கப்பட்ட போதிலும் தட்கல் டிக்கெட் முன்பதிவு செய்யும் வசதி கொண்டு வரப்படவில்லை. அத்துடன், குறைந்த தூரங்களுக்கு செல்லும் போது, ஒரு சில தென்மாவட்ட ரெயில்களில் ஆன்லைனில் தட்கல் முன்பதிவு செய்ய முடிவதில்லை. ரெயில் புறப்படும் இடத்தில் இருந்து மட்டுமே தட்கல் முன்பதிவு செய்யும் வசதி உள்ளது.
கட்டண சலுகை
ஆனால், ரெயில் நிலைய முன்பதிவு மையங்களில் குறைந்த தூர பயணத்துக்கு தட்கல் முன்பதிவு செய்யும் வசதி இருப்பதாக கூறப்படுகிறது. அதேபோல, தென்னக ரெயில்வேயில் மூத்த குடிமக்களுக்கான இருக்கை ஒதுக்கீடு மட்டும் செய்யப்பட்டு உள்ளது. ஆனால், சலுகைக்கட்டணம் வழங்கப்படாமல் உள்ளது. இதனால், ரெயில் பயணம் மேற்கொள்ளும் பயணிகள் கடும் அவதிக்கு உள்ளாகி உள்ளனர்.
மேலும், தட்கல் டிக்கெட் முன்பதிவு விவகாரத்தில் உள்ள குளறுபடிகளை நீக்கி, பழைய நிலையில் அனைத்து வகை யான டிக்கெட்டுகளும் முன்பதிவு செய்யும்படி மாற்றம் கொண்டுவர வேண்டும் என்று பயணிகள் தரப்பில் வலியுறுத்தப்பட்டு உள்ளது.

Next Story