தேங்கி கிடக்கும் மழைநீரால் நோய் பரவும் அபாயம்
நாகை வேளாண்மை இணை இயக்குனர் அலுவலகத்தில் தேங்கி கிடக்கும் மழைநீரால் நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. எனவே உடனடியாக அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
நாகப்பட்டினம்:
நாகை வேளாண்மை இணை இயக்குனர் அலுவலகத்தில் தேங்கி கிடக்கும் மழைநீரால் நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. எனவே உடனடியாக அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
வேளாண் இணை இயக்குனர் அலுவலகம்
நாகை ஒருங்கிணைந்த கலெக்டர் அலுவலக வளாகத்தில் வேளாண்மை இணை இயக்குனர் அலுவலகம் உள்ளது. இங்கு 50-க்கும் மேற்பட்ட பணியாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர். கடந்த சில நாட்களாக பெய்த மழை காரணமாக இந்த அலுவலகத்தில் தண்ணீர் குளம்போல தேங்கியது. மழை விட்டு சில நாட்களுக்கு மேல் ஆகியும் இதுவரை தண்ணீர் வடியாமல் அப்படியே தேங்கி நிற்கிறது. இதனால் அலுவலக வளாகத்தில் பழுதடைந்து காணப்படும் வாகனங்கள் தேங்கிய மழை நீரில் நிற்கின்றன.
நோய் பரவும் அபாயம்
தற்போது தேங்கி நிற்கும் தண்ணீரால் துர்நாற்றம் வீசுகிறது. மேலும் இங்கு கொசுக்கள் அதிக அளவில் உற்பத்தி ஆகி உள்ளது. இதனால் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு நோய் பரவும் அபாயம் உள்ளது என்று அலுவலக பணியாளர்கள் கூறுகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் வேளாண்மை இணை இயக்குனர் அலுவலக வளாகத்தில் குளம்போல தேங்கி நிற்கும் மழைநீரை வெளியேற்றி, நோய் பரவுவதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அலுவலக பணியாளர்கள், பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Related Tags :
Next Story