துறைரீதியான விசாரணை அதிகாரி நியமனத்திற்கு தடை
பெண் போலீஸ் இன்ஸ்பெக்டர் மீது ரூ.10 லட்சம் மோசடி வழக்கில் துறைரீதியான விசாரணை அதிகாரி நியமனத்திற்கு தடை விதித்து ஐகோர்ட்டு உத்தரவிட்டு உள்ளது.
மதுரை,
வியாபாரியிடம் பணம் பறித்த வழக்கில் நாகமலை புதுக்கோட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் வசந்தி கடந்த சில மாதங்களுக்கு முன்பு கைதானார். இதனால், அவர் போலீஸ் இன்ஸ்பெக்டர் பணியிலிருந்து இடைநீக்கம் செய்யப்பட்டார். இதைத் தொடர்ந்து அவர் மீது துறைரீதியான நடவடிக்கை எடுப்பதற்காக விசாரணை அதிகாரி நியமிக்கப்பட்டு உள்ளார். அவர் மீதான வழக்கில் இதுவரை குற்றப்பத் திரிக்கை தாக்கல் செய்யப்படாததால், துறைரீதியான நடவடிக்கையை ரத்து செய்யக் கோரியும், விசாரணைக்கு தடை கோரியும் வசந்தி, ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்தார்.
இந்த மனுவை நேற்று விசாரித்த நீதிபதி புகழேந்தி, மனுதாரர் மீது துறைரீதியான நடவடிக்கை தொடர்பான விசாரணை அதிகாரி நியமனத்திற்கு தடை விதித்தார். வசந்தியின் இந்த வழக்கு குறித்து போலீஸ் தரப்பில் பதில் அளிக்கும்படி நீதிபதி உத்தரவிட்டார். விசாரணையை ஒத்திவைத்தார்.
Related Tags :
Next Story