உத்தமபாளையத்தில் உருண்டு விழும் அபாயத்தில் ராட்சத பாறை


உத்தமபாளையத்தில் உருண்டு விழும் அபாயத்தில் ராட்சத பாறை
x
தினத்தந்தி 8 Dec 2021 9:23 PM IST (Updated: 8 Dec 2021 9:23 PM IST)
t-max-icont-min-icon

உத்தமபாளையத்தில் உருண்டு விழும் அபாயத்தில் உள்ள ராட்சத பாறையை அகற்ற பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

உத்தமபாளையம்:
உத்தமபாளையம் அருகே மேற்கு தொடர்ச்சி மலையடிவாரத்தில் மூஞ்சில்கரடு என்ற மலைப்பகுதி உள்ளது. இதன் கீழ்பகுதியில் மானாவாரி விவசாய நிலங்கள் உள்ளன. இங்கு நிலக்கடலை, தக்காளி, அவரை, பீன்ஸ், மிளகாய், எள் உள்ளிட்ட பயிர்கள் சாகுபடி செய்யப்பட்டுள்ளது.
இந்தநிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு இந்த பகுதியில் கனமழை பெய்தது. அதன் எதிரொலியாக நேற்று முன்தினம் மூஞ்சில்கரட்டில் திடீரென்று மண்சரிவு ஏற்பட்டது. அப்போது ராட்சத பாறை ஒன்று உருண்டு, ஒரு இடத்தில் தொங்குவது போல் நிற்கிறது. எப்போது வேண்டுமானாலும் அந்த பாறை உருண்டு விழுந்து ஆபத்தை ஏற்படுத்தும் வகையில் உள்ளது. 
எனவே அந்த பாறையை உடனடியாக அகற்ற வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். மேலும் மண்சரிவால் விவசாய நிலங்கள் சேதமடைந்துள்ளதாக விவசாயிகள் தெரிவித்தனர். 

Next Story