தரமணியில் தடுப்பு சுவரில் மோட்டார் சைக்கிள் மோதி புகைப்பட கலைஞர் பலி


தரமணியில் தடுப்பு சுவரில் மோட்டார் சைக்கிள் மோதி புகைப்பட கலைஞர் பலி
x
தினத்தந்தி 8 Dec 2021 10:10 PM IST (Updated: 8 Dec 2021 10:10 PM IST)
t-max-icont-min-icon

தரமணியில் தடுப்பு சுவரில் மோட்டார் சைக்கிள் மோதி புகைப்பட கலைஞர் பலி.

ஆலந்தூர்,

சென்னை தரமணி தந்தை பெரியார் நகர் புத்தர் தெருவை சேர்ந்தவர் சிவகுமார் (வயது 47). புகைப்பட கலைஞராக பணியாற்றி வந்தார். இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு விஜய நகரில் நடந்த ஒரு நிகழ்ச்சியில் பணி முடித்துவிட்டு அதிகாலை 2 மணி அளவில் தனது மோட்டார் சைக்கிளில் தரமணி 100 அடி சாலை வழியாக வீடு திரும்பிக்கொண்டிருந்தார்.

அப்போது அங்குள்ள தனியார் ஏ.டி.எம். அருகே வந்தபோது, எதிர்பாராத விதமாக கட்டுப்பாட்டை இழந்த மோட்டார் சைக்கிள் தடுப்புச்சுவரில் மோதியதில் தூக்கி வீசப்பட்டார்.

இதில், தலை மற்றும் மார்பு பகுதியில் பலத்த காயம் ஏற்பட்டு சம்பவ இடத்திலேயே இறந்தார். இதுகுறித்து அறிந்த கிண்டி போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ராயப்பேட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

இதுபற்றி கிண்டி போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Next Story