மொபட்டில் சென்ற கல்லூரி மாணவர் சாவு


மொபட்டில் சென்ற கல்லூரி மாணவர் சாவு
x
தினத்தந்தி 8 Dec 2021 10:28 PM IST (Updated: 8 Dec 2021 10:28 PM IST)
t-max-icont-min-icon

மயிலாடுதுறை அருகே தனியார் பஸ் மோதி மொபட்டில் சென்ற கல்லூரி மாணவர் பரிதாபமாக இறந்தார்.

மயிலாடுதுறை:
மயிலாடுதுறை அருகே தனியார் பஸ் மோதி மொபட்டில் சென்ற கல்லூரி மாணவர் பரிதாபமாக இறந்தார். 
கல்லூரி மாணவர் சாவு 
மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுகா வடகரை அரங்கக்குடி இக்பால் தெருவை சேர்ந்த ரகமதுநிசார் மகன் யூசுப்கான் (வயது 19). இவர் மயிலாடுதுறை அருகே மன்னம்பந்தலில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் பி.காம் 2-ம் ஆண்டு படித்து வந்தார். நேற்று மாலை 4 மணியளவில் கல்லூரி முடிந்து செல்போன் பழுது நீக்குவதற்காக மொபட்டில் மயிலாடுதுறைக்கு சென்று கொண்டிருந்தார். அப்போது தரங்கம்பாடி சாலையில் மூங்கில்தோட்டம் பர்மா காலனி அருகே சென்ற தனியார் பஸ்சை முந்தி செல்ல முயன்றார். இதில் பஸ் மொபட் மீது மோதியது. இதில் உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே யூசுப்கான் பரிதாபமாக இறந்தார்.   
போக்குவரத்து பாதிப்பு 
தகவலறிந்த மயிலாடுதுறை போலீஸ் இன்ஸ்பெக்டர் செல்வம் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று இறந்த யூசுப்கான் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மயிலாடுதுறை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பிவைத்தனர்.  இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த விபத்தின் காரணமாக மயிலாடுதுறை-தரங்கம்பாடி சாலையில் 1 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Next Story