ம.குன்னத்தூர் சீனிவாச பெருமாள் கோவிலில் தீர்த்தவாரி உற்சவம்
ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம்
உளுந்தூர்பேட்டை,
உளுந்தூர்பேட்டை அருகே ம.குன்னத்தூர் கிராமத்தில் உள்ள சீனிவாசப் பெருமாள் கோவிலில் ஆண்டுதோறும் கார்த்திகை மாதம் தீர்த்தவாரி உற்சவம் நடைபெறும். அதன்படி இந்த ஆண்டுக்கான தீர்த்தவாரி உற்சவம் கோவில் அருகே உள்ள குளத்தில் நேற்று நடந்தது. இதையொட்டி நேற்று முன்தினம் இரவு அலங்கரிக்கப்பட்ட வாகனத்தில் சீனிவாச பெருமாள் முக்கிய வீதிகள் வழியாக வலம் வந்தார். இதையடுத்து சிகர நிகழ்ச்சியான தீர்த்தவாரி உற்சவம் நேற்று நடைபெற்றது. காலை சீனிவாச பெருமாளுக்கு சிறப்பு அபிஷேகம் செய்து, மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது. தொடர்ந்து அங்குள்ள கோவில் குளத்தில் தீர்த்தவாரி உற்சவம் நடந்தது. இதில் மணிக்கண்ணன் எம்.எல்.ஏ., தி.மு.க. ஒன்றிய செயலாளர் வைத்தியநாதன் உள்பட உளுந்தூர்பேட்டை மற்றும் அதன் சுற்று வட்டார கிராமங்களை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். நூற்றுக்கும் மேற்பட்ட பக்தர்கள் மொட்டையடித்து தங்கள் வேண்டுதலை நிறைவேற்றினார்கள்.
Related Tags :
Next Story