இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர் மண்வெட்டியுடன் ஆர்ப்பாட்டம்


இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர் மண்வெட்டியுடன் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 8 Dec 2021 11:00 PM IST (Updated: 8 Dec 2021 11:00 PM IST)
t-max-icont-min-icon

இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர் மண்வெட்டியுடன் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

கீரமங்கலம்:
கீரமங்கலம் அருகே கொத்தமங்கலத்தில் நீர்நிலை ஆக்கிரமிப்புகளை அகற்றக்கோரி இந்திய கம்யூனிஸ்டு கட்சி சார்பில் மண் வெட்டியுடன் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதற்கு கிளை செயலாளர் ராஜகுணசேகரன் தலைமை தாங்கினார். ஒன்றிய செயலாளர் சொர்ணகுமார், விவசாய சங்க செயலாளர் செல்வராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். முன்னாள் மாவட்ட செயலாளர் செங்கோடன் ஆர்ப்பாட்டத்தை தொடங்கி வைத்தார். ஆர்ப்பாட்டத்தில் நீர்நிலை ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும். பி.எஸ்.என்.எல். சேவையை துரிதமாக்க வேண்டும். சாலைகளை சீரமைக்க வேண்டும். 100 நாள் வேலையை முறைப்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி மண்வெட்டியுடன் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டனர். கோரிக்கைகள் நிறைவேற்றப்படாத நிலையில் தொடர் போராட்டம் நடத்த போவதாக அறிவித்துள்ளனர்.

Next Story