சிறு, குறு, நடுத்தர தொழில்களுக்கான சிறப்பு தொழில் கடன் முகாம்


சிறு, குறு, நடுத்தர தொழில்களுக்கான சிறப்பு தொழில் கடன் முகாம்
x
தினத்தந்தி 8 Dec 2021 11:11 PM IST (Updated: 8 Dec 2021 11:11 PM IST)
t-max-icont-min-icon

சிறு, குறு, நடுத்தர தொழில்களுக்கான சிறப்பு தொழில் கடன் முகாம்

ராணிப்பேட்டை

தமிழ்நாடு தொழில் முதலீட்டு கழகம் சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் பிரிவுகளுக்கு புதிய தொழிற்சாலைகளை நிறுவுவதற்கும், தற்போது இயங்கிக்கொண்டிருக்கும் பிரிவுகளை விரிவுபடுத்துவதற்கும், உற்பத்தியை பன்முகப் படுத்துவதற்கும் பல்வேறு சிறப்பு திட்டத்தின் கீழ் கடனுதவி வழங்கி வருகிறது. காட்பாடி காந்திநகர் பகுதியில் உள்ள வேலூர் கிளை அலுவலகத்தில் சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில்களுக்கான சிறப்பு தொழில் கடன் வழங்கும் முகாம் வருகிற 15-ந் தேதி வரை நடைபெற உள்ளது.

இந்த சிறப்பு தொழில்கடன் முகாமில் மத்திய, மாநில அரசுகளின் மானியங்கள், புதிய தொழில் முனைவோர் மற்றும் தொழில் நிறுவன மேம்பாட்டுத் திட்டம் போன்றவை குறித்த விரிவான விளக்கங்கள் தரப்படும். தகுதி பெறும் தொழில்களுக்கு தமிழக அரசின் 25 சதவீத முதலீட்டு மானியம் ரூ.50 லட்சம் வரை வழங்கப்படும்.

இந்த வாய்ப்பினை ராணிப்பேட்டை மாவட்ட புதிய தொழில் முனைவோர், தொழில் அதிபர்கள் பயன்படுத்தி தொழில் திட்டங்களுடன் வருகை தந்து தொழில் கடன் மற்றும் மத்திய, மாநில அரசுகளின் மானிய சேவைகளை பயன்படுத்திக் கொள்ளலாம்.
இந்த தகவலை மாவட்ட கலெக்டர் பாஸ்கர பாண்டியன் தெரிவித்துள்ளார்.

Next Story