அரசு கேபிள் டி.வி. அதிகாரிகள் ஆய்வு


அரசு கேபிள் டி.வி. அதிகாரிகள் ஆய்வு
x
தினத்தந்தி 8 Dec 2021 11:29 PM IST (Updated: 8 Dec 2021 11:29 PM IST)
t-max-icont-min-icon

நிலக்கோட்டை பகுதியில் அரசு கேபிள் டிவி அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.

நிலக்கோட்டை: 

நிலக்கோட்டை பகுதியில் செயல்பட்டு வரும் தமிழ்நாடு அரசு கேபிள் டிவி. இயக்குபவர்கள் அலுவலகங்களில் அரசு கேபிள் டிவி நிறுவன திண்டுக்கல் மாவட்ட துணை மேலாளர் யூஜின் தலைமையில் அதிகாரிகள் நேற்று திடீர் ஆய்வு செய்தனர். அப்போது அரசு கேபிள் டி.வி. ஆபரேட்டர்களை சந்தித்த அதிகாரிகள், நிலுவையில் உள்ள சந்தா மற்றும் செயல்படுத்தாமல் இருக்கும் செட்டாப் பாக்ஸ் ஆகியவை குறித்த விவரங்களை அரசுக்கு உடனே சமர்ப்பிக்க வேண்டும். 

செயல்பாட்டில் உள்ள செட்டாப் பாக்ஸ்களுக்கான கட்டண தொகையை அரசு கேபிள் டி.வி. நிறுவனத்தின் பெயரில் வரைவோலையாக செலுத்த வேண்டும் என்று உத்தரவிட்டனர். மேலும் அவ்வாறு செலுத்தாவிட்டால் சம்பந்தப்பட்ட கேபிள் டி.வி. ஆபரேட்டர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரிக்கை விடுத்தனர். 

Next Story