கால்நடை வளர்க்கும் விவசாயிகள் கிசான் கடன் அட்டை பெற விண்ணப்பிக்கலாம்
கிசான் கடன் அட்டை பெற விண்ணப்பிக்கலாம்
திருப்பத்தூர்
திருப்பத்தூர் மாவட்டத்தில் கால்நடை வளர்க்கும் விவசாயிகளுக்கு கிசான் கடன் அட்டை வழங்கிட மத்திய அரசு அறிவித்துள்ளது. அதன்படி கால்நடை பராமரிப்புத்துறையின் மூலம் விவசாயம் சார்ந்த கால்நடை வளர்ப்போருக்கு தாங்கள் வளர்த்து வரும் கால்நடைகளின் மதிப்பில் 20 சதவீத தொகை கால்நடை வளர்ப்பு மற்றும் பராமரிப்புக்காக கிசான் கடன் அட்டை மூலம் கடன் வழங்கப்படும்.
எனவே கால்நடை வளர்ப்போர் அருகிலுள்ள அரசு கால்நடை மருந்தக கால்நடை உதவி மருத்துவரை அணுகி உரிய படிவத்தில் பூர்த்தி செய்து அத்துடன் ஆதார் அட்டை, வங்கி கணக்கு புத்தக நகல், இரண்டு புகைப்படம், நில ஆவணங்கள் நகல் ஆகியவற்றை இணைத்து வாரநாட்களில் சமம்பந்தப்பட்ட கால்நடை உதவி மருத்துவரிடம் மற்றும் சிறப்பு முகாம்களிலும் வருகிற 25.2.2022-க்குள் சமர்பிக்கலாம்.
தகுதியான விண்ணப்பங்கள் பரிசீலிக்கப்பட்டு நிர்ணயிக்கப்பட்ட வட்டியில் கடன் வழங்கப்படும். கால்நடை வளர்ப்போர் இந்த வாய்ப்பினை பயன்படுத்தி கொள்ளலாம்.
இத்தகவலை மாவட்ட கலெக்டர் அமர்குஷ்வாஹா தெரிவித்துள்ளார்.
Related Tags :
Next Story