தீயை அணைக்க உதவிய பொதுமக்கள்
தீயை அணைக்க உதவிய பொதுமக்கள்
ராணுவ ஹெலிகாப்டர் விழுந்து விபத்துக்குள்ளாகி தீப்பிடித்து எரிந்தது. இதைப்பார்த்ததும் அப்பகுதி பொதுமக்கள் அதிர்ச்சியடைந்தனர். அப்பகுதிக்கு மீட்பு குழுவினர் வந்து மீட்பு பணியில் ஈடுபட்டுக்கொண்டு இருந்தனர். மலை பகுதி என்பதால் அங்கு தீயணைப்பு கருவிகள் எதுவும் செல்ல முடியாத சூழ்நிலை ஏற்பட்டது.
எனவே விபத்து நடந்த பகுதியில் வசித்த பொதுமக்கள் தங்களின் வீடுகளில் குடத்தில் வைத்து இருந்த தண்ணீரை கொண்டு வந்து மீட்பு பணியில் ஈடுபட்டவர்களுக்கு கொடுத்து உதவினர். மேலும் ஒருவீட்டில் இருந்து பிளாஸ்டிக் பைப் மூலம் போக்குவரத்து போலீசார் ஒருவர் தண்ணீரை பீய்ச்சியடித்தவாறு தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டார்.
Related Tags :
Next Story