மாவட்ட செய்திகள்

தினத்தந்தி புகார் பெட்டி + "||" + Complaint Box

தினத்தந்தி புகார் பெட்டி

தினத்தந்தி புகார் பெட்டி
‘தினத்தந்தி’ புகார் பெட்டிக்கு 89398 18888 என்ற ‘வாட்ஸ்-அப்’ எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-
தினத்தந்தி புகார் பெட்டிக்கு நன்றி
திருச்சி மாவட்டம், முசிறி நகராட்சி 3-வது வார்டில் அமைந்துள்ள அங்கன்வாடியில் சுமார் 30 குழந்தைகள் படித்து வருகின்றனர். இந்த அங்கன்வாடி முன்பு குப்பைகள் கொட்டப்பட்டு குப்பை மேடு போல் காணப்படுகிறது. இதனால் அப்பகுதியில் சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளதுடன் குழந்தைகளுக்கு நோய் பரவும் அபாயம் உள்ளது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என தினத்தந்தி புகார் பெட்டியில் செய்தி வெளியிடப்பட்டது. இதன் எதிரொலியாக சம்பந்தப்பட்ட நிர்வாக அதிகாரிகள் அங்கன்வாடி முன்பு குவிந்து கிடந்த குப்பைகளை அகற்றினர். இதையடுத்து செய்தி வெளியிட்ட தினத்தந்தி புகார் பெட்டிக்கும், குப்பைகளை அகற்றிய சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கும் அப்பகுதி பொதுமக்கள் நன்றி தெரிவித்தனர்.
பொதுமக்கள், முசிறி, திருச்சி.


வேகத்தடை அமைக்கப்படுமா?
கரூர் மாவட்டம்  ஈசநத்தம் பகுதியில் உள்ள பொன்னகரில் மெயின் சாலைகளில் எந்த ஒரு இடத்திலும் வேகத்தடை இல்லை. இதனால் அந்த வழியாக செல்லும் அனைத்து வாகனங்களும் அதி வேகமாக செல்கிறது. இதனால் சில நேரங்களில் ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது. எனவே பொன்னகர் பகுதிகளில் உள்ள சாலைகளில் வேகத்தடை அமைத்து வாகனங்கள் மெதுவாக செல்ல நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
கிருஷ்ணன், ஈசநத்தம், கரூர் 


பயணிகள் நிழற்குடை முன்பு உள்ள முட்புதர்கள்
புதுக்கோட்டை மாவட்டம், பரம்பூர் பஞ்சாயத்து பூலாம்பட்டியில் பயணிகள் நிழற்குடை ஒன்று உள்ளது. இங்கிருந்து ஏராளமான பொதுமக்கள் பஸ் ஏறி பல்வேறு இடங்களுக்கு சென்று வருகின்றனர். இந்தநிலையில் நிழற்குடை முன்பு புற்கள் முளைத்து புதர் மண்டி கிடக்கிறது. இதனால் பொதுமக்கள், பள்ளி மாணவ-மாணவிகள் யாரும் நிழற்குடை உள்ளே செல்ல முடியாமல் வெளியே நின்கின்றனர். தற்போது மழை பெய்து வருதால் அனைத்து தரப்பினரும் கடும் அவதி அடைந்து வருகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நிழற்குடை முன்பு முளைத்துள்ள முட்புதர்களை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். 
இதேபோல் பரம்பூர் மெயின் கடைவீதியில் உள்ள பயணிகள் நிழற்குடையும் பயன்படுத்த முடியாமல் உள்ளது. இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். 
செண்பகலெட்சுமி, பரம்பூர், புதுக்கோட்டை 
ஆபத்தான குடிநீர் தொட்டி
திருச்சி மாநகராட்சி 47-வது வார்டு, கொட்டகொல்லைத் தெருவில் 40 ஆண்டுகளாக குடிநீர்தொட்டி உள்ளது. இந்த குடிநீர் தொட்டி கடந்த சில வருடங்களாக பயன்பாட்டில் இல்லை.  தற்பொழுது குடிநீர் தொட்டி ஒரு புறமாக சாய்ந்த நிலையில் எப்போது வேண்டுமாலும் கீழே விழும் நிலையில் மிகவும் ஆபத்தாக உள்ளது. எனவே அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள், பள்ளி குழந்தைகள் அச்சத்துடனே சென்று வருகின்றனர். குடிநீர் தொட்டி உடைந்து விழுந்தால் உயிர் சேதம் ஏற்படவும் வாய்ப்பு உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக அந்த குடிநீர் தொட்டியை சரி செய்ய வேண்டும் அல்லது அதனை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும். 
செல்வி, திருச்சிஅங்கன்வாடி முன்பு தேங்கி நிற்கும் மழைநீர்
அரியலூர் மாவட்டம், உடையார்பாளையம் வட்டம் ஜெயங்கொண்டம் நகராட்சிக்கு உட்பட்ட 4-வார்டு சின்னவளையம் வடக்கு தெருவில் அங்கன் வாடி மையம் உள்ளது. இங்கு அப்பகுதியை சேர்ந்த ஏராளமான குழந்தைகள் படித்து வருகின்றனர். தற்போது மழை பெய்து வருவதால் அங்கன்வாடி முன்பு மழைநீர் தேங்கி சேறும், சகதியுமாக உள்ளது. மேலும் அதில் இருந்து கொசுக்கள் உற்பத்தியாகிறது. இதனால் நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இதனால் அப்பகுதி பெற்றோர்கள் தங்களது குழந்தைகளை அங்கன்வாடிக்கு அனுப்பவே அச்சப்பட்டு வருகின்றனர். எனவே உடனடியாக அங்கன்வாடி முன்பு தேங்கியுள்ள மழைநீரை அப்புறப்படுத்த சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
விஷ்ணு, சின்னவளையம், அரியலூர்.


கண்காணிப்பு கேமரா சரிசெய்யப்படுமா?
புதுக்கோட்டை மாவட்டம் அரிமளம் ஒன்றியம் தேக்காட்டூர் பஞ்சாயத்து பகுதிகளில் திருட்டு சம்பவங்களை தடுக்க பல்வேறு இடங்களில் கண்காணிப்பு கேமராக்கள் வைக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில்  7 கேமராக்கள் கடந்த 6 மாதங்களாக சரியாக இயங்காமல் உள்ளது தெரியவந்துள்ளது. எனவே உடனடியாக மாவட்ட நிர்வாகம் மற்றும் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இயங்காமல் உள்ள கண்காணிப்பு கேமராக்களை சரிசெய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் 
செல்வி, தேக்காட்டூர், புதுக்கோட்டை


சுற்றித்திரியும் பன்றிகளால் பொதுமக்கள் அச்சம்
திருச்சி மாவட்டம், அரியமங்கலம் கோட்டம், 22-வது வார்டு தோப்புத்தெரு பகுதியில் பன்றிகள் ஏராளமாக சுற்றித்திரிகிறது. பன்றிகள் அந்த வழியாக நடந்து செல்பவர்களை கடிக்க வருவதுபோல் துரத்துகின்றன. மேலும் மோட்டார் சைக்கிளில் செல்பவர்களை துரத்துவதினால் அவர்கள் நிலை தடுமாறி கீழே விழும் நிலை ஏற்படுகிறது. இதனால் பொதுமக்கள், குழந்தைகள் மிகவும் அச்சத்துடனே சென்று வருகின்றனர். எனவே மாநகராட்சி அதிகாரிகள் பன்றிகளை உடனடியாக பிடித்து செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும்.
லெட்சுமி, அரியமங்கலம், திருச்சி.

தொடர்புடைய செய்திகள்

1. புகார் பெட்டி
புகாா்பெட்டியில் தஞ்சை மக்கள் தாிவித்த குறைகள் விவரம் வருமாறு
2. தினத்தந்தி புகார் பெட்டி: மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள்
தினத்தந்தி புகார் பெட்டிக்கு 8939078888 என்ற வாட்ஸ்- அப் எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-
3. தினத்தந்தி புகார் பெட்டி
தினத்தந்தி புகார் பெட்டிக்கு 89398 18888 என்ற ‘வாட்ஸ்-அப்’ எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-
4. தினத்தந்தி புகார் பெட்டி
‘தினத்தந்தி’ புகார் பெட்டிக்கு 89398 18888 என்ற ‘வாட்ஸ்-அப்’ எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-
5. தினத்தந்தி புகார் பெட்டி
‘தினத்தந்தி’ புகார் பெட்டிக்கு 89398 18888 என்ற ‘வாட்ஸ்-அப்’ எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-