மாணவ-மாணவிகள் கல்வி உதவித்தொகை பெற கால நீட்டிப்பு
மாணவ-மாணவிகள் கல்வி உதவித்தொகை பெற கால நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது
பெரம்பலூர்
தமிழ்நாட்டில் அரசு, அரசு உதவிபெறும் மற்றும் அங்கீகரிக்கப்பட்ட தனியார் கல்வி நிலையங்களில் ஒன்றாம் வகுப்பு முதல் பி.எச்.டி. வரை (தொழிற்கல்வி, தொழில்நுட்ப கல்வி, மருத்துவம் உள்பட) பயிலும் இஸ்லாமிய, கிறிஸ்தவ, சீக்கிய, புத்த, பார்சி மற்றும் ஜெயின் மதங்களைச் சேர்ந்த மாணவ, மாணவிகளிடமிருந்தது 2021-22-ம் ஆண்டிற்கு பள்ளிப்படிப்பு, பள்ளி மேற்படிப்பு மற்றும் தகுதி மற்றும் வருவாய் அடிப்படையிலான கல்வி உதவித்தொகை திட்டத்தின் கீழ் (புதியது மற்றும் புதுப்பித்தல்) உதவித்தொகை பெறுவதற்கான விண்ணப்பங்கள் www.scholarships.gov.in என்ற இணையதள முகவரியில் விண்ணப்பிக்க கடைசி தேதி கடந்த மாதம் 30-ந்தேதி என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. தற்போது, கல்வி உதவித்தொகை பெறுவதற்கு வருகிற 15-ந்தேதி வரை கால நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது.
மேற்படி தேசிய கல்வி உதவித்தொகை திட்டத்தின் கீழ் பெரம்பலூர்-அரியலூர் மாவட்டங்களை சேர்ந்த தகுதியுள்ள சிறுபான்மையின மாணவ, மாணவிகள் காலகெடுவிற்குள் விண்ணப்பித்து பயன்பெறலாம். கூடுதல் விவரங்களுக்கு அந்தந்த மாவட்ட கலெக்டர் அலுவலகங்களில் அமைந்துள்ள மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலரை தொடர்பு கொள்ளலாம்.
Related Tags :
Next Story