வாலிபர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது


வாலிபர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது
x
தினத்தந்தி 8 Dec 2021 7:11 PM GMT (Updated: 8 Dec 2021 7:11 PM GMT)

தலைமை ஆசிரியர் கொலை வழக்கில் கைதான வாலிபர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது

அரியலூர்
அரியலூர் மாவட்டம், உடையார்பாளையம் செட்டியார் தெருவில் வசித்து வந்தவர் செல்வராஜ் (வயது 58). ஸ்ரீபுரந்தான் அரசு மேல்நிலைப்பள்ளியில் தலைமை ஆசிரியராக பணியாற்றி வந்த இவர், கடந்த அக்டோபர் மாதம் 5-ந் தேதி சோழன்குறிச்சி சாலை அருகே வெட்டி கொலை செய்யப்பட்டார். இந்த ெகாலை தொடர்பாக ஜெயங்கொண்டம் காமராஜபுரத்தைச் சேர்ந்த சேகர் மகன் வெங்கடேசன் (23) என்பவரை தனிப்படை போலீசார் கைது செய்தனர். பின்னர் அவர் கோர்ட்டில் ஆஜர் படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இந்தநிலையில், வெங்கடேசன் வெளியே வந்தால் மேலும் பல குற்றச் செயல்களில் ஈடுபடக்கூடும், சமூகத்துக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தக்கூடும் என்பதால் அவரை குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பெரோஸ்கான் அப்துல்லா பரிந்துரை செய்ததன்பேரில் வெங்கடேசனை குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்ய  மாவட்ட கலெக்டர் ரமணா சரஸ்வதி உத்தரவிட்டார். அதற்கான நகல் திருச்சி மத்திய சிறையில் உள்ள வெங்கடேசனிடம் வழங்கப்பட்டு கையெழுத்து பெறப்பட்டது.


Next Story