நீச்சல் அணி தேர்வு


நீச்சல் அணி தேர்வு
x
தினத்தந்தி 9 Dec 2021 12:58 AM IST (Updated: 9 Dec 2021 12:58 AM IST)
t-max-icont-min-icon

மதுரை காமராஜர் பல்கலைக்கழக மண்டல அளவிலான நீச்சல் அணி தேர்வு விருதுநகரில் நடந்தது.

விருதுநகர், 
விருதுநகர் செந்திக்குமார் நாடார் கல்லூரி நீச்சல் குளத்தில் மதுரை காமராஜர் பல்கலைக்கழக மண்டல அளவிலான நீச்சல் அணி தேர்வு செய்யப்பட்டு வருகிறது. இதில் தேர்வு செய்யப்படும் அணி புவனேஸ்வரில் கலிங்கா பல்கலைக்கழகத்தில் நடைபெறவுள்ள தேசிய போட்டியில் கலந்து கொள்ள உள்ளது. அணித்தேர்வினை விருதுநகர் மாவட்ட விளையாட்டு அலுவலர் ராஜா தொடங்கி வைத்தார். கல்லூரி முதல்வர் டாக்டர் சுந்தர பாண்டியன் தலைமை தாங்கினார். அணித்தேர்வு நடுவர்களாக உடற்கல்வி இயக்குனர்கள் சிவக்குமார், கதிர்வேல் பாண்டியன், உதயகுமார், முருகேசன் ஆகியோர் செயல்பட்டனர். இத்தேர்வில் 4 மாவட்டங்களில் இருந்து 65 கல்லூரி மாணவர்கள், 30 மாணவிகள் கலந்து கொண்டனர்.


Next Story