முறைகேடுகளில் ஈடுபட்ட ரேஷன் கடை ஊழியருக்கு 6 மாதம் சிறை தண்டனை
முறைகேடுகளில் ஈடுபட்ட ரேஷன் கடை ஊழியருக்கு 6 மாதம் சிறை தண்டனை விதிக்கப்பட்டது
பெரம்பலூர்
அரியலூர் மாவட்டம், திருமானூர் ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட சின்ன பட்டக்காடு கிராமத்தை சேர்ந்த வெங்கடாசலம். இவர் கடந்த 2013-ம் ஆண்டு கீழப்பழுவூர் அருகே உள்ள கீழஎசனை பகுதி நேர ரேஷன் கடையில் விற்பனையாளராக பணிபுரிந்த போது, சின்ன பட்டக்காடு ரேஷன் கடையில் முறைகேடான செயல்களில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. இதையடுத்து வெங்கடாசலம் மீது, அப்போதைய மாவட்ட வழங்கல் அலுவலர் குணசேகர் கொடுத்த புகாரின்பேரில், வெங்கடாசலம் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கு பெரம்பலூர் குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிமன்றம்-2-ல் நடைபெற்று வந்தது. மேலும், அரியலூர் மாவட்ட குடிமை பொருட்கள் வழங்கல் குற்றப்புலனாய்வு துறையினரால் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. மேற்படி வழக்கை விசாரித்த குற்றவியல் நீதித்துறை நடுவர் முறைகேடுகளில் ஈடுபட்ட ரேஷன் கடை விற்பனையாளர் வெங்கடாசலம் மீது சுமத்தப்பட்ட குற்றம் நிரூபிக்கப்பட்டதால் அவருக்கு 6 மாத சிறை தண்டனையும், ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார்.
Related Tags :
Next Story