கீழப்பழுவூரில் வடமாநில தொழிலாளி கொலை


கீழப்பழுவூரில் வடமாநில தொழிலாளி கொலை
x
தினத்தந்தி 9 Dec 2021 1:10 AM IST (Updated: 9 Dec 2021 1:10 AM IST)
t-max-icont-min-icon

கீழப்பழுவூரில் வடமாநில தொழிலாளி கொலை செய்யப்பட்டார்.

கீழப்பழுவூர்
பீகார் மாநிலம் பெகல்டி பாயா பகுதியை சேர்ந்த யோகேந்திர ராய் என்பவரின் மகன் சுரேந்திர குமார் ராய் (வயது 44). இவர் அரியலூர் மாவட்டம் திருமானூர் ஒன்றியத்திற்குட்பட்ட கீழப்பழுவூரில் கடந்த 2 ஆண்டுகளாக தங்கி அப்பகுதியில் உள்ள கம்பெனி ஒன்றில் பிளானட் ஆபரேட்டராக பணிபுரிந்து வந்தார். 
இந்நிலையில் நேற்று அப்பகுதியில் உள்ள காலிமனை ஒன்றில் கொலை செய்யப்பட்டு பிணமாக கிடந்தார். இதனை அப்பகுதியினர் பார்த்து போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். தகவலின்பேரில், கீழப்பழுவூர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பார்வையிட்டனர். அப்போது சுரேந்திரகுமார் ராயின் கழுத்து நெரிக்கப்பட்டிருந்தது தெரிய வந்தது. பின்னர் அவரது உடலை போலீசார் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரியலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.  மேலும், இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து அவரை கொலை செய்தவர்கள் யார்?, என்ன காரணத்துக்காக கொலை செய்யப்பட்டார்? என்று தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த கொலை சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

Next Story