குடியிருப்புக்குள் புகுந்த மழைநீர்; பொதுமக்கள் அவதி


குடியிருப்புக்குள் புகுந்த மழைநீர்; பொதுமக்கள் அவதி
x
தினத்தந்தி 9 Dec 2021 1:12 AM IST (Updated: 9 Dec 2021 1:12 AM IST)
t-max-icont-min-icon

திசையன்விளையில் குடியிருப்புக்குள் புகுந்த மழைநீரால் பொதுமக்கள் அவதிப்பட்டனர்.

திசையன்விளை:

சமீபத்தில் பெய்த மழையால் விஜயநாராயணம் பெரியகுளம் உபரிநீர் மூலம் சுவிஷேசபுரம் குளம் மற்றும் அதனை அடுத்துள்ள குளங்கள் நிரம்பி திசையன்விளை செங்குளத்திற்கு கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு வந்தது. தொடர்ந்து செங்குளம் முழுவதும் நிரம்பியதால் அதன் உபரிநீர் அதன் மேல் மடை மற்றும் கீழ்மடை வழியாக திறந்துவிடப்பட்டது. கீழ்மடை வழியாக செல்லும் கால்வாய் தூர்வாரப்படாததால் தண்ணீர் முழுவதும் பத்திரப்பதிவு அலுவலகம் பின்பு உள்ள குடியிருப்பு பகுதிகளுக்குள் புகுந்தது. இதனால் தெருக்களில் தண்ணீர் தேங்கி கிடக்கிறது.

பல நாட்களாக தண்ணீர் தேங்கி நிற்பதால் சுகாதாரக்கேடு ஏற்படுகிறது. பள்ளிகூடம் செல்லும் மாணவர்கள் புத்தக பைகளை தலையில் சுமந்தபடி கடந்து செல்கின்றனர். எனவே கால்வாயை தூர்வாரி தேங்கியுள்ள தண்ணீரை வெளியேற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Next Story