மீனவர்கள் கண்டன ஆர்ப்பாட்டம்
மீனவ பெண்ணை அரசு பஸ்சில் இருந்து இறக்கி விடப்பட்டதை கண்டித்து நேற்று குளச்சலில் மீனவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
குளச்சல்,
மீனவ பெண்ணை அரசு பஸ்சில் இருந்து இறக்கி விடப்பட்டதை கண்டித்து நேற்று குளச்சலில் மீனவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மீனவர்கள் ஆர்ப்பாட்டம்
மீன்களை பஸ்சில் கொண்டு சென்ற பெண்ணை பஸ்சில் இருந்து இறக்கி விடப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்த சம்பவத்திற்கு கண்டனம் தெரிவிக்கும் வகையில் 'கோட்டையில் குமரி மீனவர்கள்'அமைப்பு மற்றும் மீனவர்கள் சார்பில் குளச்சல் காமராஜர் பஸ் நிலையம் அருகில் நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது.
இதில் மாவட்ட ஊராட்சி முன்னாள் கவுன்சிலர் சசியோன், முன்சிறை ஒன்றிய கவுன்சிலர் பேபி ஜாண், கிள்ளியூர் ஒன்றிய கவுன்சிலர் தேவதாஸ், தூத்தூர் ஊராட்சி கவுன்சிலர் ஜெயராஜ், குளச்சல் மீனவர் கூட்டுறவு சங்க தலைவர் மரிய ஜாண், வாணியக்குடி மீனவர் கூட்டுறவு சங்க தலைவர் யேசுதாசன், இரயுமன்துறை மீனவர் கூட்டுறவு சங்க தலைவர் ஜோண், நடுத்துறை மீனவர் கூட்டுறவு சங்க தலைவர் சிபில், மாவட்ட கிறிஸ்தவர் இளைஞர் இயக்க முன்னாள் தலைவர் வின்ஸ், முட்டம் விசைப்படகு சங்கத்தை சேர்ந்த சந்திரன் ஆகியோர் கலந்து கொண்டு கண்டன உரையாற்றினர்.
கண்டன கோஷம்
'கோட்டையில் குமரி மீனவர்கள்' அமைப்பு நிர்வாகிகள் உள்பட மீன் பெண் வியாபாரிகள் பலர் கலந்து கொண்டனர்.
போராட்டத்தில் பங்கேற்ற மீன் வியாபாரிகள் தலையில் மீன் பாத்திரம் சுமந்து கண்டன கோஷங்களை எழுப்பினர்.
Related Tags :
Next Story