தினத்தந்தி புகார் பெட்டி
புகார் பெட்டி
விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பு ஊராட்சி ஒன்றியம் குன்னூர் மாதாங்கோவில் தெருவில் கடந்த சில நாட்களாக குடிநீர் வினியோகம் செய்யப்படவில்லை. குடிநீர் பிரச்சினையால் பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். குடிநீரை விலை கொடுத்து வாங்க வேண்டிய நிலை உள்ளது. இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
தங்கப்பாண்டி, குன்னூர்.
மதுரை திருநகர் மணி தெருவில் ஏராளமான குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இப்பகுதியில் மழைநீர் குளம் போல தேங்கி நிற்கிறது. இதன் காரணமாக ெபாதுமக்களும், வாகன ஓட்டிகளும் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். தேங்கி நிற்கும் மழைநீரில் இருந்து கொசுக்களும் உற்பத்தியாகி வருகிறது. இதனால் பொதுமக்களுக்கு நோய் பரவும் அபாயம் உள்ளது. பொதுமக்களின் நலன்கருதி தேங்கி நிற்கும் மழைநீரை அகற்றுவார்களா
சிவசுப்பிரமணியன், மதுரை.
சிவகங்கை மாவட்டம் இளையான்குடி செல்லும் சாலையானது மிகவும் மோசமான நிலையில் குண்டும், குழியுமாக உள்ளது. இந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகளும், பொதுமக்களும் கடும் சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர். அடிக்கடி விபத்துகளும் நடக்கிறது. எனவே, இந்த சாலையை உடனடியாக சீரமைக்க வேண்டும்.
ராஜா, ராமநாதபுரம்.
விருதுநகர் மாவட்டம் சிவகாசி மாநகராட்சி சித்துராஜபுரம் காயாம்பு நகரில் ஏராளமான குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இப்பகுதியில் சாலையோரத்தில் குப்பைகள் அதிக அளவில் கொட்டப்பட்டு வருகின்றன. இதன் காரணமாக துர்நாற்றம் வீசுகிறது. சுகாதார சீர்கேடாகவும் உள்ளது. பொதுமக்கள் மூக்கை பிடித்துக்கொண்டு செல்ல வேண்டிய அவல நிலை காணப்படுகிறது. குவிந்து கிடக்கும் குப்ைபகளை அகற்ற அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
கனி, சித்துராஜபுரம்.
சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் பகுதியில் நாய்கள் தொல்லை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. தெருவில் நடந்து செல்பவர்களையும், இருசக்கர வாகனங்களில் செல்பவர்களையும் நாய்கள் துரத்தி, துரத்தி கடிக்கின்றன. நாய்க்கடியால் தினமும் பலர் பாதிக்கப்படுகின்றனர். தெருவில் செல்லவே பொதுமக்கள் அச்சப்படுகின்றனர். நாய்களை பிடித்து அப்புறப்படுத்த அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா
கார்த்தி, திருப்புவனம்.
ராமநாதபுரம் மாவட்டம் இருமேனி கிராமத்திற்கு தினமும் நகர பஸ்கள் இயக்கப்படுகின்றன. சில நேரங்களில் பஸ்கள் தாமதமாக வருவதால் உச்சிப்புளியுடன் திரும்பி செல்கின்றன. இதனால் பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். எனவே, பஸ்களை இருமேனி வரை முறையாக இயக்க வேண்டும்.
சேகர், இருமேனி.
மதுரை மாவட்டம் நாகமலைபுதுக்கோட்டை பஞ்சாயத்திற்கு உட்பட்ட ராம்கோ நகரில் மழைநீர் தேங்கி நிற்பதால் பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். தேங்கி நிற்கும் மழைநீரில் இருந்து அதிக அளவில் கொசுக்கள் உற்பத்தியாகிறது. கொசுக்கடியால் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை இரவில் தூங்க முடியாமல் தவிக்கின்றனர். மேலும் பொதுமக்களுக்கு மர்ம காய்ச்சல் பரவும் அபாயம் உள்ளதால் இதுகுறித்து அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுப்பார்களா
இளங்கோவன், மதுரை.
ராமநாதபுரம் மாவட்டம் பனைக்குளம் நகரில் ஆடு், மாடுகள் சாலையில் சுற்றி திரிகின்றன. மாடுகள் சாலைகளில் ஆங்காங்கே படுத்து தூங்குகின்றன. இதன் காரணமாக பொதுமக்களும், வாகன ஓட்டிகளும் கடும் சிரமத்திற்கு உள்ளாகின்றனர். மேலும் வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்கும் சம்பவங்கள் அடிக்கடி நடக்கின்றன. வாகன ஓட்டிகளின் நலன்கருதி சாலையில் சுற்றும் மாடுகளை பிடித்து அதன் உரிமையாளர்களுக்கு அபராதம் விதிக்க வேண்டும்.
பாருக்உசேன், பனைக்குளம்.
Related Tags :
Next Story