சாலையை சீரமைக்கக்கோரி காங்கிரசார் மறியல்
மார்த்தாண்டத்தில் சாலையை சீரமைக்கக்கோரி மறியல் போராட்டம் நடத்திய காங்கிரசார் 60 பேர்களை போலீசார் கைது செய்தனர்.
குழித்துறை,
மார்த்தாண்டத்தில் சாலையை சீரமைக்கக்கோரி மறியல் போராட்டம் நடத்திய காங்கிரசார் 60 பேர்களை போலீசார் கைது செய்தனர்.
சேதமடைந்த சாலை
குமரி மாவட்டத்தில் சமீபத்தில் பெய்த கன மழையால் சாலைகள் சேதம் அடைந்தன. அதைத்தொடர்ந்து நாகர்கோவிலில் இருந்து மார்த்தாண்டம் வழியாக களியக்காவிளை வரை உள்ள தேசிய நெடுஞ்சாலையை சீரமைக்கக்கோரியும், குழித்துறை நகராட்சியில் குடிநீர் குழாய் பதிக்க தோண்டிய பள்ளங்களை மூட வலியுறுத்தியும் குமரி மேற்கு மாவட்ட காங்கிரஸ் கட்சி சார்பில் மறியல் போராட்டம் நடத்தப்போவதாக அறிவித்து இருந்தனர்.
அதன்படி நேற்று காலையில் மார்த்தாண்டம் சந்திப்பு பகுதியில் தேசிய மயமாக்கப்பட்ட வங்கி முன் காங்கிரசார் திரண்டனர். அங்கு தக்கலை போலீஸ் துணை சூப்பிரண்டு கணேசன், மார்த்தாண்டம் போலீஸ் இன்ஸ்பெக்டர் செந்தில் வேல்குமார் மற்றும் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
மறியல்
காங்கிரஸ் கட்சியினர் சாலையை சீரமைக்கக்கோரி சாலையில் அமர்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதற்கு மேற்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் தாரகை கத்பர்ட் தலைமை தாங்கினார். குழித்துறை நகர காங்கிரஸ் தலைவர் அருள்ராஜ் முன்னிலை வகித்தார். இதில், மாநில காங்கிரஸ் பொதுச் செயலாளர் பால்ராஜ், மேற்கு மாவட்ட துணை தலைவர் பால்மணி ஆற்றூர் நகர தலைவர் ஜான்வெர்ஜின் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
இதுபற்றி தகவல் அறிந்ததும் குழித்துறை நகராட்சி சுகாதார அதிகாரி ஸ்டாலின் குமார், மேலாளர் ஜெயன் ஆகியோர் நேரில் வந்து பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது, குழித்துறை நகராட்சி பகுதியில் தேசிய நெடுஞ்சாலையில் குடிநீர் குழாய் பதிப்பதற்காக தோண்டிய பகுதிகளை விரைவில் சீரமைப்பதாக தெரிவித்தனர்.
60 பேர் கைது
இந்த நிலையில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட தாரகை கத்பர்ட் உள்பட 60 பேரை போலீசார் கைது செய்தனர். பின்னர், அவர்கள் அந்த பகுதியில் உள்ள ஒரு தனியார் மண்டத்தில் தங்க வைக்கப்பட்டனர்.
Related Tags :
Next Story