தலைவாசலில், ஆர்.இளங்கோவன் தலைமையில் எடப்பாடி பழனிசாமிக்கு உற்சாக வரவேற்பு


தலைவாசலில், ஆர்.இளங்கோவன் தலைமையில் எடப்பாடி பழனிசாமிக்கு உற்சாக வரவேற்பு
x
தினத்தந்தி 9 Dec 2021 3:26 AM IST (Updated: 9 Dec 2021 3:26 AM IST)
t-max-icont-min-icon

தலைவாசலில் எடப்பாடி பழனிசாமிக்கு, ஆர்.இளங்கோவன் தலைமையில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

தலைவாசல்:
தலைவாசலில் எடப்பாடி பழனிசாமிக்கு, ஆர்.இளங்கோவன் தலைமையில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
எடப்பாடி பழனிசாமி
அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளராக ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளராக எடப்பாடி பழனிசாமி ஆகியோர் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டனர். இதைதொடர்ந்து எடப்பாடி பழனிசாமி நேற்று சேலம் மாவட்டத்துக்கு வந்தார். அவருக்கு காலை 11 மணிக்கு தலைவாசலில் வரவேற்பு அளிக்கப்பட்டது.
மாநில கூட்டுறவு வங்கி தலைவர் ஆர்.இளங்கோவன் தலைமையில் ஏராளமான அ.தி.மு.க.வினர் திரண்டு நின்று வரவேற்பு அளித்தனர். அப்போது மேளதாளம் முழங்க பட்டாசு வெடிக்கப்பட்டது.
சிலைகளுக்கு மாலை
தொடர்ந்து தலைவாசல் பஸ் நிலையத்தில் உள்ள எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா சிலைகளுக்கு எடப்பாடி பழனிசாமி மாலை அணிவித்தும், மலர்தூவியும் மரியாதை செலுத்தினார்.
நிகழ்ச்சியில் எம்.எல்.ஏ.க்கள் நல்லதம்பி (கெங்கவல்லி), ஜெயசங்கரன் (ஆத்தூர்), சித்ரா (ஏற்காடு), ராஜமுத்து (வீரபாண்டி), தலைவாசல் ஒன்றிய குழு தலைவர் ராமசாமி, தலைவாசல் தெற்கு ஒன்றிய செயலாளர் சந்திரசேகர், வீரகனூர் நகர செயலாளர் ராஜேந்திரன், மாவட்ட பொருளாளர் ஜெகதீசன், மாவட்ட தகவல் தொழில்நுட்ப பிரிவு செயலாளர் ஜெயகாந்தன், மாவட்ட இளைஞர், இளம்பெண்கள் பாசறை செயலாளர் ராஜராஜசோழன், மாவட்ட ஜெயலலிதா பேரவை இணை செயலாளர் அருண்குமார், மாவட்ட இளைஞர், இளம்பெண் பாசறை இணை செயலாளர் வாசுதேவன் உள்ளிட்ட அ.தி.மு.க.வினர் எடப்பாடி பழனிசாமிக்கு சால்வை அணிவித்தும், பூங்கொத்து, மரக்கன்றுகள் கொடுத்தும் வரவேற்பு அளித்தனர்.

Next Story