நங்கவள்ளி அருகே விஷம் குடித்து தொழிலாளி தற்கொலை


நங்கவள்ளி அருகே விஷம் குடித்து தொழிலாளி தற்கொலை
x
தினத்தந்தி 9 Dec 2021 3:26 AM IST (Updated: 9 Dec 2021 3:26 AM IST)
t-max-icont-min-icon

நங்கவள்ளி அருகே விஷம் குடித்து தொழிலாளி தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

மேச்சேரி:
நங்கவள்ளி அருகே விஷம் குடித்து தொழிலாளி தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
தொழிலாளி சாவு
நங்கவள்ளி அருகே பெரிய சோரகை செங்காட்டூர் பகுதியைச் சேர்ந்தவர் சேகர் (வயது 42). நெசவு தொழிலாளி. இவர், திடீரென பூச்சி மருந்தை குடித்து மயங்கி கிடந்தார். அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு தாரமங்கலம் தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.
அங்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு மேல் சிகிச்சைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டும் சேகர் சிகிச்சை பலன் அளிக்காமல் பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து நங்கவள்ளி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
வீட்டுக்கடன்
விசாரணையில், மேட்டூர் குஞ்சாண்டியூர் பகுதியில் ஒரு தனியார் வங்கியில் ரூ.4 லட்சம் வரை வீட்டுக்கடன் வாங்கி இருந்ததாகவும், அந்த கடனுக்கு மாதம் ரூ.11 ஆயிரம் தவணை தொகை கட்டி வந்ததாகவும் கூறப்படுகிறது. அந்த கடனை கடந்த 5 மாதங்களாக கட்ட தவறியதாகவும், அதனை கட்ட சொல்லி அந்த வங்கி நிர்வாகம் சேகருக்கு நெருக்கடி கொடுத்து வந்ததாகவும் கூறப்படுகிறது. இதனால் மனம் உடைந்த சேகர் தற்கொலை செய்து கொண்டதாகவும் தெரிகிறது. இதுதொடர்பாக தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது.
இறந்த சேகருக்கு, செல்வி என்ற மனைவியும், ஒரு மகளும், 2 மகன்களும் உள்ளனர்.

Next Story