வீட்டில் தனியாக இருந்த முதியோர்களை ஏமாற்றி பணம்-நகை பறிப்பு
வீட்டில் தனியாக இருந்த முதியோர்களை ஏமாற்றி நகை-பணத்தை அபகரித்துச்சென்ற மர்ம நபரை தேடி வருகிறார்கள்.
சென்னை திருவல்லிக்கேணி குளக்கரை தெருவில் வீட்டில் தனியாக இருந்த சீனிவாச வரதன்(வயது 73) என்ற முதியவரிடம் மர்ம நபர் ஒருவர், அவரது மகனுக்கு நல்ல வரன் இருப்பதாக சொல்லி ஏமாற்றி, வீட்டின் பீரோவில் இருந்த 5 பவுன் தங்க நகையை திருடிச்சென்று விட்டார்.
அதே பகுதியில் தனியாக வசித்த அனுராதா என்ற 75 வயது மூதாட்டியிடமும், அதே மர்ம நபர் ரூ.15 ஆயிரத்தை அபகரித்து போய் விட்டார். இது தொடர்பாக ஐஸ்-அவுஸ் போலீசார் வழக்குப்பதிவு செய்து, நகை-பணத்தை அபகரித்துச்சென்ற மர்ம நபரை தேடி வருகிறார்கள்.
Related Tags :
Next Story