வங்கி சேவை மையத்தில் இருந்து பேசுவதாக கூறி இளம்பெண்ணிடம் நூதன திருட்டு
வங்கிகளில் இருந்து அழைப்பதாக கூறி நடைபெறும் பண மோசடி விவகாரம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை வடபழனி, கங்கையம்மன் கோவில் தெருவைச் சேர்ந்தவர் கீர்த்திகா (வயது 23). தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார். இவரது செல்போனுக்கு ஒரு அழைப்பு வந்தது. அதில் பேசிய மர்மநபர், வங்கி வாடிக்கையாளர் சேவை மையத்தில் இருந்து பேசுவதாக கூறி, கீர்த்திகாவின் கிரெடிட் கார்டு, வங்கி கணக்கு, ரகசிய குறியீட்டு எண் உள்ளிட்ட விவரங்களை கேட்டார். வங்கி சேவை மையத்தில் இருந்து பேசுவதாக நினைத்த கீர்த்திகாவும், மர்மநபர் கேட்ட விவரங்களை தெரிவித்தார்.
பின்னர் அந்த நபர் இணைப்பை துண்டித்தார். சிறிது நேரத்தில் கீர்த்திகாவின் வங்கி கணக்கில் இருந்து ரூ.44 ஆயிரம் எடுக்கப்பட்டதாக அவரது செல்போனுக்கு குறுஞ்செய்தி வந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். பின்னர்தான் மர்மநபர் தன்னிடம் நூதன முறையில் பணத்தை திருடியது தெரிந்தது. இதுபற்றி வடபழனி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
Related Tags :
Next Story