பட்டா கத்தியுடன் பெட்ரோல் பங்கில் ரகளை செய்த மர்ம நபர்கள்


பட்டா கத்தியுடன் பெட்ரோல் பங்கில் ரகளை செய்த மர்ம நபர்கள்
x
தினத்தந்தி 9 Dec 2021 5:56 PM IST (Updated: 9 Dec 2021 5:56 PM IST)
t-max-icont-min-icon

பட்டா கத்தியுடன் பெட்ரோல் பங்கில் ரகளை செய்த மர்ம நபர்கள்

பல்லடத்தில் பட்டா கத்திகளுடன் பெட்ரோல் பங்கில் புகுந்து ரகளையில் ஈடுபட்ட மர்ம நபர்களால் பரபரப்பு.
பல்லடத்தில் கோவை திருச்சி தேசிய நெடுஞ்சாலையில், மாணிக்காபுரம் சாலை பிரிவு அருகே தனியார் பெட்ரோல் பங்க் உள்ளது. இந்த பெட்ரோல் பங்கில் நேற்று முன்தினம் இரவு சுமார் 12 மணி அளவில் 2 மோட்டார் சைக்கிள்களில் நான்கு நபர்கள் வந்துள்ளனர். வந்தவுடன் அவர்கள் வைத்திருந்த பட்டாக்கத்தி மற்றும் ஆயுதங்களுடன் பெட்ரோல் பங்கின் அலுவலக கதவுகளை அடித்து உடைத்தனர். பின்னர் அங்கு இருந்த பொருட்களையும் அடித்து சேதப்படுத்தினர். தொடர்ந்து அந்த நான்கு பேரும் அங்கிருந்து கிளம்பி மாணிக்காபுரம் சாலையில் உள்ள மற்றொரு பெட்ரோல் பங்கில் இதேபோல் ரகளையில் ஈடுபட்டனர். பின்னர் அவர்கள் அனைவரும் அங்கிருந்து மின்னல் வேகத்தில் தப்பிச் சென்றனர். இதுகுறித்து பெட்ரோல் பங்க் உரிமையாளர்கள் பல்லடம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் அங்கு பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராக்களை ஆய்வு செய்து ரகளையில் ஈடுபட்ட மர்ம நபர்கள் யார் என்பது குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள். கோவை திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் அரசு மருத்துவமனை மற்றும் பல்லடம் போலீஸ் நிலையம், போலீஸ் துணை சூப்பிரண்டு அலுவலகம் ஆகிய உள்ள பகுதியில் நடைபெற்ற இந்த சம்பவத்தால் பல்லடத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.


Next Story