குவிந்து கிடக்கும் குப்பை
குவிந்து கிடக்கும் குப்பை
திருப்பூர் 24வது வார்டு பிரிஜ்வே காலனி, சூர்யா நகர், லட்சுமி நகர் பகுதிகளில் உள்ள சாலை இருபுறத்திலும் குப்பைகள் கொட்டப்பட்டுள்ளன. இந்த குப்பைகள் சாக்கடை வாய்க்காலுக்குள் விழுந்து அடைப்பு ஏற்பட்டுள்ளது. இந்த சாலையானது குறுகிய பகுதி என்பதால் பள்ளிக்குழந்தைகளும், பொதுமக்களும் குப்பைக்கழிவுகளுக்கு மத்தியில் நடந்து செல்கிறார்கள். மேலும் குப்பைக்கழிவுகள் சாலை முழுதும் சிதறி வருகின்றது. குப்பைக்கழிவுகளை் அகற்றாததால் துர்நாற்றம் வீசி நோய்த் தொற்று பரவும் அபாய நிலையில் உள்ளது. எனவே குப்பையை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.
ந.தெய்வராஜ்.
குவிந்து கிடக்கும் குப்பை
உடைந்த மின்கம்பம்
திருப்பூர் தந்தை பெரியார் நெசவாளர் காலனி பகுதியில் ஆரம்ப சுகாதார நிலையம் உள்ளது. இதன் அருகில் மின் கம்பம் சேதம் அடைந்து உள்ளது. பொதுமக்கள் அதிகம் வந்து செல்லும் வழியில் உள்ளதால் மின்கம்பம் உடைந்து அசம்பா விதம் நடக்க வாய்ப்பு உள்ளது. எனவே அதற்கு முன்பு மின்சார வாரியம் உரிய நடவடிக்கை எடுத்து மின்கம்பத்தை மாற்ற வேண்டும் என்று அந்த பகுதி பொது மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Related Tags :
Next Story