2 மாணவர்கள் உள்பட 5 பேருக்கு கொரோனா


2 மாணவர்கள் உள்பட 5 பேருக்கு கொரோனா
x
தினத்தந்தி 9 Dec 2021 6:10 PM IST (Updated: 9 Dec 2021 6:10 PM IST)
t-max-icont-min-icon

2 மாணவர்கள் உள்பட 5 பேருக்கு கொரோனா

வெள்ளகோவில் வட்டார ஆரம்ப சுகாதார நிலையத்தின் சார்பில் தினசரி கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. கொரோனா தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. இந்நிலையில் 2 நாட்களுக்கு முன்பு கொரோனா பரிசோதனை மேற்கொண்டதில் அறிஞர் அண்ணா பள்ளி மாணவர்கள் 2 பேர் உள்பட மொத்தம் 5 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது பரிசோதனை  தெரியவந்துள்ளது. இதையடுத்து கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் குடும்பத்தினருக்கும், அறிஞர் அண்ணா மேல்நிலைப்பள்ளியில் உள்ள தொற்று ஏற்பட்ட வகுப்பை சேர்ந்த மாணவ மாணவிகளுக்கும் ஆசிரிய, ஆசிரியைகள் உள்பட 160 பேருக்கு வெள்ளகோவில் வட்டார ஆரம்ப சுகாதார நிலையத்தின் சார்பில் பள்ளி வளாகத்தில் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

Next Story