வாக்கு எண்ணும் மையத்தை ஆய்வு செய்த கலெக்டர்


வாக்கு எண்ணும் மையத்தை ஆய்வு செய்த கலெக்டர்
x
தினத்தந்தி 9 Dec 2021 6:12 PM IST (Updated: 9 Dec 2021 6:12 PM IST)
t-max-icont-min-icon

வாக்கு எண்ணும் மையத்தை ஆய்வு செய்த கலெக்டர்

வெள்ளகோவில் நகராட்சிக்கு உள்ளாட்சி தேர்தல் நடைபெற உள்ளது. இதற்காக வாக்கு எண்ணும் மையம் அமைய இருக்கும் அறிஞர் அண்ணா மேல்நிலைப் பள்ளி வளாகத்தை கலெக்டர் வினீத் ஆய்வு செய்தார். பின்னர் நடேசன் நகர் பகுதியில் குடிநீர் வினியோகம் செய்யும் மேல்நிலை தொட்டியையும், அங்குள்ள சாலையையும், வெள்ளகோவில் பஸ் நிலையத்தையும் கலெக்டர் பார்வையிட்டார்.
முன்னதாக வெள்ளகோவில் நகராட்சி அலுவலகத்தில் கலெக்டர் ஆய்வு பணி மேற்கொண்டார். அப்போது நகராட்சி ஆணையாளர் ஆர்.மோகன்குமார் மற்றும் அலுவலர்கள் உடனிருந்தனர்.

Next Story