வியாபாரி வீட்டில் 21 பவுன் நகை கொள்ளை


வியாபாரி வீட்டில் 21 பவுன் நகை கொள்ளை
x
தினத்தந்தி 9 Dec 2021 9:02 PM IST (Updated: 9 Dec 2021 9:02 PM IST)
t-max-icont-min-icon

வியாபாரி வீட்டில் 21 பவுன் நகை கொள்ளை

ஸ்ரீவில்லிபுத்தூர்
ஸ்ரீவில்லிபுத்தூர் மடத்துப்பட்டி தெருவை சேர்ந்தவர் சீதையம்மாள் (வயது 65). இவர் நெல்லையில் உள்ள தனது மகன் மீனாட்சிசுந்தரம் வீட்டிற்கு சென்றுள்ளார். இவர் பேண்டேஜ் துணிகள் மொத்த வியாபாரி. நேற்று சீதையம்மாள் வீட்டிற்கு வந்து பார்த்தபோது வீட்டில் இருந்த பீரோ மற்றும் பொருட்கள் சிதறிக்கிடந்தன.  மேலும் பீரோவில் இருந்த 21 பவுன் நகை, ரூ.10 ஆயிரம் கொள்ளையடிக்கப்பட்டது தெரியவந்தது. இதுகுறித்து ஸ்ரீவில்லிபுத்தூர் நகர் குற்றப்பிரிவு போலீசில் புகார் செய்தார். புகாரின் பேரில் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Next Story